ஆப்நகரம்

Sri Reddy: என்னுடைய தலை எப்போதும் அஜித்தின் காலடியில்: அதிர வைத்த ஸ்ரீ ரெட்டி!

எப்போதும் தூங்க செல்வதற்கு முன்பு தல அஜித் படத்தை பார்ப்பேன் என்று தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி கூறியுள்ளார்.

Samayam Tamil 21 Mar 2019, 5:40 pm
எப்போதும் தூங்க செல்வதற்கு முன்பு தல அஜித் படத்தை பார்ப்பேன் என்று தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி கூறியுள்ளார்.
Samayam Tamil reddy


தமிழ், தெலுங்கு நடிகர்கள், இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் பலரும் தன்னை படுக்கைக்கு அழைத்தார்கள் என்று கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீ ரெட்டி. இதையடுத்து, சென்னைக்கு குடிபெயர்ந்தார். அதன் பின்னர், தமிழகத்தில் நிலவும் சமூக பிரச்சனைகள் குறித்து கருத்து தெரிவித்து வருகிறார். அண்மையில், பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களை நேரில் சந்தித்து அவர்களுடன் இணைந்து போராடுவேன் என்று குறிப்பிட்டிருந்தார்.

தற்போது ரெட்டி டைரிஸ் என்ற பெயரில் இவரது வாழ்க்கை வரலாறு படமாக உருவாகவுள்ளது. இதற்கிடையில், தமிழ் சினிமா ஹீரோக்களில் தல அஜித் என்றால் ரொம்பவும் பிடிக்குமாம். அண்மையில், தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அஜித் குறித்து கூறியிருப்பதாவது: எப்போதும், அஜித் படத்தை பார்க்காமல் நான் தூங்க போக மாட்டேன். அவர் தமிழ்நாட்டின் நம்பர் 1 நடிகை. எப்போதும் சர்ச்சைகளில் இருந்து விலகியே இருப்பார். குடும்பத்தை மதிக்கக் கூடியவர். இவ்வளவு ஏன், கோடிக்கணக்கான பெண்களின் இதயங்களை திருடியவர். என் தலை உங்கள் காலில் தல என்று பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்