ஆப்நகரம்

ரெஜினா மீது கோபத்தில் இருக்கும் தெலுங்கு சினிமா!

தெலுங்கு பட வாய்ப்புகளை மறுத்து வருவதால் நடிகை ரெஜினா மீது தெலுங்கு திரையுலகினர் அதிருப்தியில் இருக்கின்றனராம்.

TNN 15 Sep 2017, 4:20 pm
தெலுங்கு பட வாய்ப்புகளை மறுத்து வருவதால் நடிகை ரெஜினா மீது தெலுங்கு திரையுலகினர் அதிருப்தியில் இருக்கின்றனராம்.
Samayam Tamil telugu cinema got angry with actress regina cassandra
ரெஜினா மீது கோபத்தில் இருக்கும் தெலுங்கு சினிமா!


கண்ட நாள் முதல் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பிறகு ஒரு சில தமிழ் படங்களில் மட்டும் நடித்தார். பின்னர் வாய்ப்பில்லாமல், தெலுங்கு பக்கம் திரும்பினார். அதன் பிறகு வரிசையாக தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வந்த கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற படத்தின் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார் ரெஜினா. இதையடுத்து தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வாய்ப்பு வர புகழின் உச்சிக்கு சென்றார்.

இந்நிலையில், கடந்த சில வருடங்களாக தமிழில் படங்கள் இல்லாமல் முழுக்க முழுக்க தெலுங்கு படங்களில் மட்டும் நடித்து வந்தார். தற்போது அதற்கு நேர்மாறாக இந்த ஆண்டு மாநகரம், சரவணன் இருக்க பயமேன், ஜெமினி கணேஷனும், சுருளி ராஜனும், சிலுக்குவார்பட்டி சிங்கம், நெஞ்சம் மறப்பதில்லை, பார்ட்டி என்று தமிழ் படங்களில் தாராளம் காட்டி வருகிறார். மேலும், நட்சத்திரம் என்ற தெலுங்கு படத்தில் மட்டும் நடித்துள்ளார். தமிழில் அதிக படங்களில் கமிட்டாகியுள்ளதால், வரும் தெலுங்கு பட வாய்ப்புகளை தவிர்த்து வருகிறாராம். இதன் காரணமாக அவர் மீது தெலுங்கு வட்டாரங்கள் அதிருப்தியில் இருக்கிறார்களாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்