ஆப்நகரம்

மது விருந்தில் நடந்த சம்பவம்: கமல் குறித்து தாடி பாலாஜி மனைவி பகீர் தகவல்..!

கமல்ஹாசன் வைத்த மது விருந்தில் நடந்த சம்பவம் குறித்து தாடி பாலாஜி மனைவி பேட்டி ஒன்றில் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 9 Apr 2022, 6:32 am
தாடி பாலாஜியும் அவரது மனைவி நித்யாவும் பிக் பாஸ் இரண்டாவது சீசனில் போட்டியாளர்களாக கலந்து கொண்டார்கள். அப்போதில் இருந்தே இவர்கள் இருவருக்கும் இடையே விரிசல் இருந்தது. பிக் பாஸ் சீசன் இறுதியில் இவர்கள் இருவரும் சேர்ந்து விட்டதாக காட்டப்பட்டது. ஆனால், இன்று வரை தாடி பாலாஜி தனியாகவும், நித்யா தன் மகள் போஷிகா உடன் தனியாக தான் வாழ்ந்து வருகிறார்.
Samayam Tamil Thaadi balaji - Nithya
Thaadi balaji - Nithya


பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்பு இருவரும் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தாலும் இவர்களுக்கிடையில் அடிக்கடி பிரச்சனை வெடித்தது. கடந்த 2020 ஆம் ஆண்டு பாலாஜி மீது நித்யா காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதில் மது அருந்துவிட்டு பாலாஜி தகாத வார்த்தைகளில் திட்டியதோடு வீட்டிற்கு வந்து கண்ணாடியை உடைத்தாகவும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும் கூறியிருந்தார். நித்யாவின் இந்த குற்றச்சாட்டை பாலாஜி மறுத்திருந்தார்.

இவர்கள் இருவரின் பிரச்சனையும் மீண்டும் பரபரப்பை கிளப்பியுள்ளது. அண்மையில் பிக் பாஸில் கமல் செய்த அட்வைஸ் குறித்து நித்யாவிடம் கேட்ட போது ‘அவர பத்தி பேசுனா, அவர பத்தி நிறய வெளியிட்டுவிடுவேன். அவர மாதிரி மோசமான கேரக்டரை நான் என் லைப்ல பாத்தது இல்ல, வேண்டாம் என்ன பேச வச்சிராதீங்க’ என்று பேசியிருந்தார். அவரின் இந்த பேச்சு பெரும் சர்ச்சைகளை கிளப்பியது.
தனுஷை பிரிந்த பின்பு 'அந்த' விஷயத்தில் அதீத ஆர்வம் காட்டும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..!
இந்நிலையில் தற்போதைய பேட்டி ஒன்றில் பங்கேற்ற நித்யா, பிக் பாஸ் முடிந்ததும் கமல் ஒரு மது விருந்து வைத்ததாகவும் அப்போது பாலாஜி தன்னிடம் சொல்லாமலேயே வந்ததாகவும் அப்போது கமல் முன் நல்லவர் போல பாலாஜி நடித்தார். அப்போது முதல் கமலிடம் இந்த பிரச்சனை குறித்து நான் பேச முற்பட்டேன். மக்கள் நீதி மய்யத்திற்காக நான் மிகவும் உழைத்தேன். அப்போதும் அவர் என்னிடம் என்ன பிரச்சனை என்பதை கேட்கவில்லை. தன் கட்சியில் இருக்கும் பெண்ணின் பிரச்சனையையே அவரால் தீர்த்து வைக்க முடியவில்லை.

அவரா மக்கள் பிரச்சனையை தீர்க்கப்போகிறார். மக்கள் நீதி மையம் பேருக்கு மட்டும் தான். மக்களுக்கு எந்த நீதியும் இல்லை என்று கூறியுள்ளார் நித்யா. அதே போல பாலாஜி குறித்து பேசிய நித்யா, அவர் நன்றாக நாடகம் போடுகிறார். அவர் மீடியாவிற்காக தான் இத்தனையும் செய்கிறார். அவர் வேலைக்காக என் மகளை கூட்டி சென்று இருக்கிறார். ஆனால், நான் கூட்டி போனதை மட்டும் குற்றம் சொல்கிறார். அவர் கண்டிப்பாக விரைவில் கைது செய்யப்படுவார் என்று கூறியுள்ளார் நித்யா. அவரின் தற்போதைய இந்த பேட்டியும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்