ஆப்நகரம்

உலகையே கலக்கும் தல57!

இயக்குனர் சிவா வெளியிட்ட தல57 புகைப்படம் இன்டர்நெட்டில் வைரலாகப் பரவுகிறது.

TNN 27 Nov 2016, 12:29 am
அஜித் நடிக்கும் தல57 படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்றுவரும் நிலையில் படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறிக்கொண்டே போகிறது. காஜல் அகர்வால் மற்றும் அக்ஷரா ஹாசன் ஆகியோர் அஜித்துடன் கதாநாயகிகளாக நடிக்ககிறார்கள். மேலும், தம்பி ராமய்யா, கருணாகரன் ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். அண்மையில், படத்தின் வில்லன் பாத்திரத்திற்காக விவேக் ஒபராயும் படக்குழுவில் இணைந்துள்ளார். ஜேம்ஸ்பாண்ட் படம் போல குற்றம் தொடர்பான திகில் படமாக இருக்கும் என்று இயக்குனர் சிவா கூறியுள்ளார். அதற்கு ஏற்ப, இசையமைப்பாளர் அனிருத் அதிரடியான மெட்டுகளை அமைத்திருக்கிறார்.
Samayam Tamil thala 57 ajith photo goes viral
உலகையே கலக்கும் தல57!


இந்நிலையில், இயக்குனர் சிவா சனிக்கிழமை இரவு தனது ட்விட்டர் பக்கத்தில் அஜித்தை படப்பில் எடுத்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இது தற்போது, உலக அளவில் ட்ரெண்ட ஆகிவிட்டது. #Thala57, #Thala57ManiaEverywhere போன்ற ஹேஷ் டேகுகளில் அந்த படம் வைரலாகப் பரவுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்