ஆப்நகரம்

தல அஜித் மருத்துவமனையில் அனுமதி: வருத்தத்தில் ரசிகர்கள்!

தல அஜித் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை அறிந்த அவரது ரசிகர்கள் வருத்தமடைந்துள்ளனர்.

TNN 9 Sep 2017, 12:52 pm
தல அஜித் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை அறிந்த அவரது ரசிகர்கள் வருத்தமடைந்துள்ளனர்.
Samayam Tamil thala ajith admitted in private hospital
தல அஜித் மருத்துவமனையில் அனுமதி: வருத்தத்தில் ரசிகர்கள்!


வீரம், வேதாளம் ஆகிய படங்களைத் தொடர்ந்து சிவா இயக்கத்தில் தல அஜித் விவேகம் படத்தைக் கொடுத்தார். இப்படம் எதிர்மறையான விமர்சனத்தைப் பெற்றாலும் வசூலிலும், படத்திற்காக தல அஜித் கடினமாக உழைத்திற்கிறார் என்பதையும், அவரது ரசிகர்கள் வெகுவாக கொண்டாடி வருகின்றனர். ஒவ்வொரு படத்திற்கு தல அஜித்தின் கடின உழைப்பு, அவர் எடுக்கும் ரிஸ்க் போன்றவற்றிற்கு அளவே இல்லை. இவ்வளவு ஏன், விவேகம் படத்திற்காக இவர் எடுத்துள்ள ரிஸ்க்கை படம் பார்த்தவர்களுக்கு மட்டும் தெரியும்.



மேலும், படத்தை பார்க்கும் போது அவரது நடிப்பைக் கண்டு அழுதவர்களும் உண்டு. அந்த வகையில் தல அஜித்திற்கு பாராட்டுக்கள் ஏராளம். இப்படத்தின் படப்பிடிப்பின் போது, அஜித்திற்கு தோளில் சில காயங்கள் ஏற்பட்டுள்ளது. அப்போது அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் கண்டிப்பாக அறுவை சிகிச்சை செய்தே ஆக வேண்டும் என்று கூறியுள்ளார்களாம். இதைத் தொடர்ந்து அஜித் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை அறிந்த அவரது ரசிகர்கள் மிகவும் வருத்தத்தில் உள்ளனர். ஆனால், சிகிச்சைக்குப் பின் அஜித் நலமாக இருக்கின்றார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்