ஆப்நகரம்

அப்செட்டில் இருக்கும் அஜித் ரசிகர்கள்!

தல அஜித் ரசிகர்கள் தற்போது அப்செட்டில் இருந்து வருகின்றனர்.

TNN 1 Apr 2017, 8:51 pm
தல அஜித் ரசிகர்கள் தற்போது அப்செட்டில் இருந்து வருகின்றனர்.
Samayam Tamil thala ajith fans now upset
அப்செட்டில் இருக்கும் அஜித் ரசிகர்கள்!


வீரம், வேதாளம் படங்களின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அஜித் - சிவா கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் விவேகம்.

இப்படத்தில் முதல் முறையாஜ் அஜித்துக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் சார்பாக தியாகராஜன் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு பல்கேரியாவில் நடந்து வருகிறது.

இந்நிலையில், ஒவ்வொரு வியாழக்கிழமையும் இப்படத்தின் பிரத்யேக போட்டோ வெளியாவதால் நேற்று முன்தினமும் இப்படத்தின் போட்டோ வெளியாகும் என்று தல ரசிகர்கள் குஷியில் இருந்துள்ளனர். ஆனால், அவர்களுக்கு தற்போது ஏமாற்றமே மிஞ்சியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தில் தல அஜித்தின் பெயர் விவேக் என்றும் கூறப்படுவதாக தகவல் தெரிவிக்கின்றது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்