ஆப்நகரம்

தல ரசிகர்கள் வாழ்த்துகளை வாரி, வாரி வழங்கும் இயக்குநர் சிவாவின் மனைவி இவர் தானாம்!

சென்னை: இயக்குநர் சிவாவின் மனைவி புகைப்படம் சமீபத்தில் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 29 Jan 2019, 10:47 pm
சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் முதல் முறையாக நடித்த திரைப்படம் “வீரம்”. கிராமத்துக் கதைக் களத்தில் உருவான இப்படம் பெரும் வெற்றி அடைந்தது. இதையடுத்து வேதாளம், விவேகம் ஆகிய படங்களில் நடித்தார்.
Samayam Tamil Siva


தொடர்ந்து 4வது முறையாக சிவா - அஜித் கூட்டணியில் உருவான திரைப்படம் “விஸ்வாசம்”. கடந்த பொங்கல் திருவிழாவின் போது, இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

தமிழகம் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் நல்ல வசூலை ஈட்டியுள்ளது. இந்தப் படத்தின் வெளியீடு குறித்து இயக்குநர் சிவா கூறுகையில், வசூலைப் பற்றி கவலைப்படாமல், ரசிகர்கள் படத்தைப் பார்க்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

தமிழ் திரையுலகில் இயக்குநர் சிவாவை அனைவருக்கும் தெரியும். ஆனால் அவரின் மனைவியை யாருக்கும் தெரியாது.

இந்நிலையில் சிவாவின் மனைவியின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இதைக் கண்ட தல ரசிகர்கள் லாங் லிவ்வு ஹேப்பி லைஃபு என்று வாழ்த்து வருகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்