ஆக்ஷனுக்கு தல அஜித் தான் மாஸ் என்று நடிகை நிக்கி கல்ராணி தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் டார்லிங் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை நிக்கி கல்ராணி. இப்படத்தைத் தொடர்ந்து கோ2, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், ஹர ஹர மகாதேவகி, கடவுள் இருக்கான் குமாரு, நெருப்பு டா, கலகலப்பு 2 உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது கீ, பக்கா, சார்லி சாப்ளின் 2 ஆகிய படங்களில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். தற்போது நயன்தாராவை இடத்தை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இவர் கூறியிருப்பதாவது: என்னைப் பொறுத்தவரையில் தமிழ் சினிமாவில் சிறந்த ஆக்ஷன் ஹீரோ யார் என்று கேட்டால் அது தல அஜித் தான். அதன் பிறகு விஜய் மற்றும் சூர்யா எமோஷனல் காட்சிகளில் நடிப்பதில் சிறந்தவர்கள் என்று கூறியுள்ளார். மேலும், ஜாலியான கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு பலர் இருந்தாலும், இதில், சிவகார்த்திகேயனை விட சிறந்தவர்கள் இருக்க முடியாது என்று கூறியுள்ளார்.