ஆப்நகரம்

Sri Devi: ஸ்ரீதேவிக்கு மரியாதை செலுத்திய நேர்கொண்ட பார்வை அஜித்!

தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலரில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் புகைப்படம் இடம்பெற்று நீங்கா நினைவுகளுடன் என்று பதிவிடப்பட்டுள்ளது.

Samayam Tamil 12 Jun 2019, 6:39 pm
தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலரில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் புகைப்படம் இடம்பெற்று நீங்கா நினைவுகளுடன் என்று பதிவிடப்பட்டுள்ளது.
Samayam Tamil Thala


தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் நேர்கொண்ட பார்வை. இயக்குனர் ஹெச் வினோத் இயக்கியுள்ளார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இப்படத்தை கிட்டத்தட்ட ரூ.40 கோடி செலவில் தயாரித்துள்ளார் என்று தகவல் தெரிவிக்கின்றது. இப்படத்தின் மூலம் நடிகை வித்யா பாலன் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.

Ajith Nerkonda Paarvai: கன்னித்தன்மையோடு இருக்கிறீர்களா? கோர்ட்டில் வாதாடும் தல அஜித்: நேர்கொண்ட பார்வை டிரைலர்!

ஒருத்தர் மேல் விஸ்வாசமா இருப்பதற்கு ஏன் இன்னொருவரை அசிங்கப்படுத்துறீங்க?

அதுவும், தல அஜித்தின் மனைவியாக நடித்துள்ளார். மேலும், ஷ்ரத்தா ஸ்ரீநாத், டெல்லி கணேஷ், ஆண்ட்ரியா தாரங்க், அஸ்வின் ராவ், ஆதிக் ரவிச்சந்திரன், சுஜித் சங்கர், கல்கி கோச்சலின், ரங்கராஜ் பாண்டே, பிரியதர்ஷினி ராஜ்குமார், அபிராமி வெங்கடாச்சலம் ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.

வரும் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. கிட்டத்தட்ட 2.04 நிமிடம் இருக்கும் இந்த டிரைலரில் தொடக்கத்தில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் புகைப்படம் இடம் பெற்றதோடு நீங்காத நினைவுகளுடன் என்று பதிவிடப்பட்டுள்ளது. தொடர்ந்த் அஜித் கோர்ட்டில் வாதாடுகிறார். கூண்டில், ஷ்ரத்தா ஸ்ரீநாத் இருக்கிறார். அவரிடம் நீங்கள் கன்னித் தன்மையோடு தான் இருக்கிறீர்களா? என்று கேட்கிறார். இல்லை என்று ஷ்ரத்தா (படத்தில் மீரா) பதிலளிக்கிறார். அதன் பிறகு வரிசையாக பலரிடம் கேள்வி எழுப்புகிறார்.

இந்த மாதிரி பெண்களுக்கு இப்படித்தான் நடக்கும் என்று கூண்டில் இருப்பவர் கூற, அப்படியெல்லாம் நடக்கக் கூடாது என்று அஜித் பதிலளிக்கிறார். இறுதியில் சண்டையிட்டு போலீஸ் அதிகாரியிடம் கேள்வி எழுப்புவதோடு டிரைலர் முடிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்