ஆப்நகரம்

விஜய் ரசிகர்களின் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைத்த தல அஜித்தின் அதிரடி அறிக்கை

விவேகம் வெளியாகயிருக்கும் இந்த நிலையில், தல அஜித் தன்னுடைய வழக்கறிஞர் மூலமாக வெளியிட்ட திடீர் அறிக்கை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

TNN 20 Aug 2017, 11:27 pm
விவேகம் வெளியாகயிருக்கும் இந்த நிலையில், தல அஜித் தன்னுடைய வழக்கறிஞர் மூலமாக வெளியிட்ட திடீர் அறிக்கை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
Samayam Tamil thala ajith made a pull stop for fighting with vijay fans in his press release
விஜய் ரசிகர்களின் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைத்த தல அஜித்தின் அதிரடி அறிக்கை


சிறுத்தை சிவா கூட்டணியில் தல நடித்துள்ள 3வது படமான விவேகம் வரும் 24ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்த நிலையில், கடந்த 19ம் தேதி தன்னுடைய வழக்கறிஞர் மூலமாக தல அஜித் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அந்த அறிக்கையில், 25 வருடங்களாக சினிமாவில் நீடித்து வரும் தல எந்த அரசியல் இயக்கத்தையும் சார்ந்தவர் அல்ல. எந்த நிறுவனத்தையோ, அமைப்பையோ, சங்கத்தையோ நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரிப்பவர் அல்ல. அவரின் 25 ஆண்டுகளாக சினிமா வளர்ச்சிக்கு ஊக்கத்துணையாக இருந்த ரசிகர்களுக்கும், பத்திரிக்கையாளர்களுக்கும், திரைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறார். அவருக்கென்று எந்த சமூக வலைதளத்திலும் கணக்கு கிடையாது. இதனைக் கொண்டு யாரோ, சில அமைப்புகளோ, தல அஜித்குமார் பெயரில் தவறான கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

இச்சம்பவம் அஜித்துக்கு மன வேதனையை அளித்துள்ளது. இதன் காரணமாக பாதிக்கப்பட்ட எல்லோரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொண்டதோடு, இதற்காக வருத்தமும் அடைந்துள்ளார். அஜித்தின் இந்த அறிக்கையின் பின்னணி என்ன என்று பார்க்கையில், சாதாரணமாக அஜித் மற்றும் விஜய் படங்கள் வெளியானாலே ரசிகர்கள் மோதிக்கொள்வது வழக்கம். அஜித் ரசிகர்கள் விஜய்யின் படத்தைப் பற்றியும், விஜய் ரசிகர்கள் அஜித்தின் படத்தைப் பற்றியும் விமர்சிப்பது வழக்கம். தற்போது அஜித்தின் விவேகமும், அடுத்து தளபதியின் மெர்சல் படமும் வெளியாகயிருக்கும் இந்த நேரத்தில் ரசிகர்களின் மோதலைத் தவிர்க்கவே தல அஜித் அப்படியொரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

மேலும், தன்னுடைய அரசியல் கருத்தை ரசிகர்களிடம் திணிக்கும் திட்டமும் இல்லை என்றும், நான் அரசியலுக்கு வரப்போவதில்லை என்றும், எனக்கு எந்த ரசிகர் மன்றமே கிடையாது என்றும் தல அஜித் தன்னுடைய அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார். விஜய் அரசியலுக்கு வருவது குறித்து கருத்து வெளியாகும் நிலையில், தல அஜித் தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று அறிக்கை வெளியிட்டது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்