ஆப்நகரம்

தல அஜித்தின் விசுவாசத்திற்காக வேலை செய்த வேலைக்காரன்?

சிவகார்த்திகேயன் நடிப்பில் வந்த வேலைக்காரன் படத்தில் விசுவாசம் அடிக்கடி பயன்படுத்தப்பட்டுள்ளது.

TNN 24 Dec 2017, 6:57 pm
சிவகார்த்திகேயன் நடிப்பில் வந்த வேலைக்காரன் படத்தில் விசுவாசம் அடிக்கடி பயன்படுத்தப்பட்டுள்ளது.
Samayam Tamil thala ajith movie title in sivakarthikeyans velaikkaran movie
தல அஜித்தின் விசுவாசத்திற்காக வேலை செய்த வேலைக்காரன்?


சிவகார்த்திகேயன் தல அஜித்தின் தீவிர ரசிகர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். இவரது நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளியான படம் வேலைக்காரன். படம் வெளியானது முதல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படத்திற்கு நல்ல விமர்சனமும் கிடைத்துள்ளது. இந்த நிலையில், இப்படத்தில் தல அஜித் சிவா இயக்கத்தில் அடுத்து நடிக்கவுள்ள படத்தின் தலைப்பான விசுவாசம் என்ற ஒன்று அடிக்கடி பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.

ஆனால், இது படத்தின் கதைக்காக எழுதப்பட்டதா இல்லை, அஜித்தின் படத்தின் பப்ளிசிட்டிக்காக வைக்கப்பட்டதா என்பது தெரியவில்லை. எனினும், சிவகார்த்திகேயன் மற்றும் மலையாள நடிகர் பகத் பாசில் இருவரும், ஒரு பொருளின் விளம்பரத்திற்காக பேசும் போது, சிவகார்த்திகேயன், இதுக்கெல்லாம் விளம்பரம் தேவையா என்று கேட்பார். அதற்கு, தல-ஐக்கு மட்டும் தான் பப்ளிசிட்டு தேவையில்லை. மற்ற எல்லாவற்றிற்கும் பப்ளிட்டி தேவை என்று கூறியிருப்பார்.

அதோடு, சமீபத்தில் நடந்த ஒரு பேட்டியில் சிவகார்த்திகேயன் கூறியிருப்பது, அஜித்தின் விவேகம் படப்பிடிப்பிற்கு, அஜித் சாரை பார்க்க செல்வேன். சார் ரொம்ப சிகப்பு. அப்படியே பார்த்துக்கொண்டிருக்க வேண்டும் என்று தோன்றும் என்று கூறியுள்ளார். மேலும், அவரது நடிப்பு பற்றி எல்லாம் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தான் அஜித்தின் தீவிர ரசிகர் என்றும் குறிப்பிட்டார். இந்த நிலையில், வேலைக்காரன் படத்தில் சிவகார்த்திகேயன் அடிக்கடி விசுவாசம் என்று குறிப்பிடுவது, தல அஜித்தின் தீவிர ரசிகர் என்பதை சுட்டிக்காட்டுவது போன்றும், படத்தை விளம்பரப் படுத்துவது போன்றும் ரசிகர்களுக்கு தோன்றுகிறது என்பது குறிப்பித்தக்கது.

யோசிக்க வைக்கும் வேலைக்காரன் படத்தின் ஹைலைட்ஸ்:

இரவு 12 மணிக்கு அனைவரும் லைட் ஆன் செய்வது
உலகில் தலைசிறந்த சொல் செயல்!
இடையிடையே வரும் ரோபோ சங்கர், நயன்தாரா
சிவகார்த்திகேயனின் தங்கைக்கு என்ன ரோல்?
விசுவாசத்திற்காக வேலை செய்வது!
கடினமான வேலை, ஸ்மார்ட்டான வேலை, நல்ல வேலை!
ரேடியோ ஸ்டேஷனை கச்சிதமாக பயன்படுத்திய இயக்குனர்!

அடுத்த செய்தி

டிரெண்டிங்