ஆப்நகரம்

Ajith Kumar: மங்காத்தா, எனை அறிந்தால் படங்களைத் தொடர்ந்து காக்கி உடை அணியும் அஜித்?

நேர்கொண்ட பார்வை படத்தின் மாஸ் வெற்றியைத் தொடர்ந்து அஜித் குமார் நடிக்கும் 60ஆவது படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி வருகிறது.

Samayam Tamil 26 Aug 2019, 7:29 pm
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அஜித் குமார். தனது கடின உழைப்பாலும், விடா முயற்சியாலும், தன்னம்பிக்கையும் செயல்படக்கூடிய நடிகர். உலகம் முழுவதும் ரசிகர்கள் பட்டாளங்களை கொண்டுள்ளார்.
Samayam Tamil 2L6A0716


தமிழ் சினிமாவில் ஒவ்வொரு ஆண்டும் எத்தனையோ படங்கள் வெளியாகி வருகிறது. அதில், பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் படங்களாகவும் அமைகிறது. இதில், ரஜினிகாந்த், கமல் ஹாசன், அஜித், விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் என்று மாஸ் ஹீரோக்களின் படங்களும் அடங்கும்.

அந்த வகையில், இந்த ஆண்டில் மட்டும் இரு வெற்றிப்படங்களை கொடுத்த நடிகரில் தல அஜித் முதலிடம் பிடித்துள்ளார். கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அஜித் நடிப்பில் வந்த விஸ்வாசம் படம் வெளியாகி உலகம் முழுவதும் ரூ.200 கோடிக்கும் அதிகமாகவே வசூல் குவித்தது. இதே போன்று இந்த மாதம் வெளியான நேர்கொண்ட பார்வை படம் உலகம் முழுவதும் வெளியாகி ரூ.150 கோடிக்கும் அதிகமாகவே வசூல் கொடுத்துள்ளது.

இதையும் படிங்க: நான் இன்னமும் மொரட்டு சிங்கிள் தான், கேம் ஓவர் கிடையாது: பிரேம்ஜி!


பெண்களை மையப்படுத்தி வெளியான இப்படத்தில் அஜித் வழக்கறிஞராக நடித்துள்ளார். ஹெச் வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் கடந்த 8ம் தேதி இப்படம் வெளியானது. பாலிவுட்டில் அமிதாப் பச்சன் நடித்த பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்காக இப்படம் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் மட்டும் இப்படம் ரூ.75 கோடி வரையிலும், சென்னையில் ரூ.11 கோடி வரையிலும் வசூல் குவித்துள்ளதாம். அதோடு விநியோகஸ்தர்களின் ஷேராக ரூ. 48 கோடி வரையில் வசூல் வந்ததாக தகவல் வெளியாகி வருகிறது. குறைவான பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இப்படம் விரைவில் ரூ.200 கோடி வசூலை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read This: Suriya: சரவெடி சிக்கலில் சூர்யாவின் காப்பான்: வெளியிட தடை கோரி வழக்கு!


இப்படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஹெச் வினோத் மற்றும் போனி கபூர் கூட்டணியில் அஜித் தனது 60ஆவது படத்தில் நடிக்கிறார். தற்காலிகமாக இப்படத்திற்கு தல 60 என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. வரும் மாதம் 29 ஆம் தேதி இப்படத்திற்கு பூஜை போடப்படுகிறது. இதையடுத்து, படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த நிலையில், தல அஜித் இப்படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே பைக் ரேஸராக அஜித் நடிக்கிறார் என்று தகவல் வெளியாகி வந்த நிலையில், தற்போது போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று சினிமா விமர்சகர் ரமேஷ் பாலா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: Miss India: கீர்த்தி சுரேஷ் நடிக்கும் 20ஆவது படம்: மிஸ் இந்தியா டைட்டில் டீசர் வெளியீடு!


இது உண்மை என்றால், அஜித் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்த வெளியான மங்காத்தா, எனை அறிந்தால் ஆகிய இரு படங்களுமே வெற்றி வாகை சூடிய படங்கள். அந்த வகையில், இந்தப் படமும் அஜித்திற்கு வெற்றி கொடுக்கும் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தில் அஜித்திற்கு வில்லனாக பாலிவுட் அல்லது டோலிவுட் பட ஹீரோக்களில் யாரேனும் ஒருவர் நடிப்பார் என்று கூறப்படுகிறது. அதற்கான பேச்சு வார்த்தையும் நடந்து வருவதாக தகவல் தெரிவிக்கின்றது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்