ஆப்நகரம்

தல அஜித்தின் "விவேகம்" பட டீசர் வெளியீடு

தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் விவேகம் படத்தின் டீசர் வெளியிடப்பட்டது

TNN 11 May 2017, 10:12 am
தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் விவேகம் படத்தின் டீசர் மே 10ஆம் தேதி இரவு வெளியானது.
Samayam Tamil thala ajith vivegam movie teaser
தல அஜித்தின் "விவேகம்" பட டீசர் வெளியீடு


சிறுத்தை சிவா இயக்கத்தில் மூன்றாவது முறையாக இணைந்துள்ள தல விவேகம் படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக முதல் முறையாக காஜல் அகர்வால் நடிக்கிறார். இப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில், ஏற்கனவே தல அஜித்தின் பர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரபேற்பைப் பெற்றன.

இந்நிலையில் விவேகம் படத்தின் டீசர் மே 10ஆம் தேதி இரவு 12.01க்கு வெளியானது. கிட்டத்தட்ட 57 வினாடிகளே இடம் பெற்று இருக்கும் இந்த டீசரை வரவேற்க டுவிட்டரிலும், ஃபேஸ்புக்கிலும் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தனர்.

இந்த டீசர் தல பிறந்த நாளில் வெளியாகும் என்று கூறப்பட்டது. மிகவும் பிரமாண்டமாகவும், ஸ்டைலிஷாகவும் உருவாகியிருக்கும் இப்படத்தில் ஹாலிவுட் படங்களுக்கு நிகரான சண்டைக் காட்சிகள், ரேஸ் என்று பட்டையை கிளப்புகிறார்.

விவேகம் பட டீசர் :

அடுத்த செய்தி

டிரெண்டிங்