ஆப்நகரம்

நேர்கொண்ட பார்வை எப்போது தான் வெளியாகும்? இன்று மாலை 6 மணிக்கு புதிய அறிவிப்பு!

தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை படத்தின் புதிய அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியாக இருக்கிறது.

Samayam Tamil 15 Jul 2019, 11:56 am
இயக்குனர் வினோத் இயக்கத்தில் தல அஜித் நடித்துள்ள படம் நேர்கொண்ட பார்வை. பாலிவுட்டில் அமிதாப் பச்சன் நடிப்பில் வந்த பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்காக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் தான் தல அஜித் வழக்கறிஞராக நடித்துள்ளார். அஜித்துடன் இணைந்து வித்யா பாலன், டெல்லி கணேஷ், ரங்கராஜ் பாண்டே, ஆண்ட்ரியா தைராங்க், அபிராமி வெங்கடாச்சலம் ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.
Samayam Tamil ajith


அண்மையில், இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைத் தொடர்ந்து, இப்படத்தை ஏற்கனவே அறிவித்த தேதிக்கு முன்பாக வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்ததாக தகவல் வெளியானது. தொடர்ந்து, இப்படத்தின் முதல் சிங்கிள் டிராக் வான் இருள் வெளியானது. இதையடுத்து, இப்படத்தின் 2ஆவது சிங்கிள் டிராக்கான EDM பாடல் லிரிக் வீடியோ வெளியானது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை, போனி கபூர் தயாரித்துள்ளார். இப்படத்தைத் தொடர்ந்து தல அஜித் நடிப்பில் உருவாக இருக்கும் தல60 படத்தையும், இவரே தயாரிக்க இருக்கிறார். இயக்குனர் வினோத் இப்படத்தை இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சீதையாக நடிக்கிறார் நயன்தாரா ! ராதாரவி என்ன சொல்வாரோ !!

கொலை செய்யப்பட்டாரா ஸ்ரீதேவி ? போனிகபூர் பதில் !!


இந்த நிலையில், இன்று மாலை 6 மணிக்கு இப்படம் குறித்து ஒரு முக்கியமான அறிவிப்பு வெளியாக இருக்கிறது. அதன்படி, இப்படத்தின் வெளியீட்டு தேதியாகவோ, அல்லது இசை வெளியீடு குறித்தோ அந்த அறிவிப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அறிவித்தபடி, ஆகஸ்ட் 10ம் தேதி சனிக்கிழமை, இப்படம் வெளியானால், இப்படத்தின் வசூல் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால், ஆகஸ்ட் 15ம் தேதி பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள சாஹோ படம் வெளியாக இருக்கிறது. ஹாலிவுட் படத்திற்கு நிகராக உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

அதனால், இப்படம் வரும் ஆகஸ்ட் 1ம் தேதி வியாழக்கிழமையே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித்தை விட அமலாபாலுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விநியோகஸ்தர்கள்

அடுத்த செய்தி

டிரெண்டிங்