ஆப்நகரம்

மலேசியாவில் நடைபெறும் தல பவுலிங் டோரனமெண்ட்!

அஜீத் ரசிகர்கள் மலேசியாவில் ‘தல பவுலிங் டோரனமெண்ட்’ என்ற போட்டியை இம்மாதம் 14ம் தேதி நடத்தவுள்ளனர்.

Samayam Tamil 11 Jul 2018, 6:50 pm
அஜீத் ரசிகர்கள் மலேசியாவில் ‘தல பவுலிங் டோரனமெண்ட்’ என்ற போட்டியை இம்மாதம் 14ம் தேதி நடத்தவுள்ளனர்.
Samayam Tamil thala


நடிகர் அஜீத் தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோவாக இருந்து வருகிறார். இவருக்கு தமிழக மட்டுமின்றி வெளிநாடுகளிலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். தற்போது நடிகர் அஜீத், சிவா இயக்கத்தில் ‘விஸ்வாசம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தைத்தான் எதிர்பார்த்து இருக்கிறார்கள் அஜீத் ரசிகர்கள்.

இம்மாதம் படத்திலிருந்து முக்கிய அப்டேட் வெளியாகும் என வந்த தகவல் ரசிகர்கள் சந்தோஷத்தில் இருக்கிறார்கள். அவருக்கு மலேசியாவிலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர்.

இந்நிலையில் மலேசியாவில் இருக்கும் மொத்த அஜீத் ரசிகர்களும் ஒன்று சேர்ந்து ‘தல பவுலிங் டோரனமெண்ட்’ என பெயரில் போட்டி ஒன்றை நடத்த ஏற்பாடு செய்துள்ளனர். இந்தப் போட்டி இம்மாதம் 14ம் நடைபெறவுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்