ஆப்நகரம்

அஜித் நடிக்கவுள்ள புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட ‘தல’ ரசிகர்கள்!

தல அஜித் நடிக்கவுள்ள புதிய படத்திற்கு அவரது ரசிகர்கள் ‘அதிகாரம் என்ற தலைப்பை வைத்து பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்.

Samayam Tamil 29 Jan 2019, 4:27 pm
தல அஜித் நடிக்கவுள்ள புதிய படத்திற்கு அவரது ரசிகர்கள் ‘அதிகாரம் என்ற தலைப்பை வைத்து பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்.
Samayam Tamil ajith


நடிகர் அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘விஸ்வாசம். அஜித்தும், இயக்குனர் சிவாவும், நான்காவது முறையாக இணைந்துள்ள இந்தப் படத்தில் நயன்தாரா ஹீரோயினியாக நடித்துள்ளார். இந்நிலையில் இந்தப் படம்3வது வாரத்தை கடந்து வெற்றிகரமாக பல திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த படத்திற்கு அடுத்ததாக அஜித், இயக்குனர் எச்.வினோத்தின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் என்பது தெரிந்ததே. இந்தப் படத்தை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தில் தல அஜித்துடன் இணைந்து ஷ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் வித்யா பாலன் ஆகியோர் பலரும் நடிக்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்படத்திற்கு தல ரசிகர்கள் ‘அதிகாரம் என பெயர் வைத்தது மட்டுமில்லாமல் அவர்களின் கை வண்ணத்தில் படத்தின் பர்ஸ்ட் லுக் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்