ஆப்நகரம்

விஜய் துரோகம் செய்துட்டார், முதுகில் குத்திட்டார்: பிரபல எழுத்தாளர் குமுறல்

தலைவி படத்தில் வேலை பார்த்த தனக்கு ஏ.எல். விஜய் நம்பிக்கைத் துரோகம் செய்து முதுகில் குத்திவிட்டதாக பிரபல எழுத்தாளர் அஜயன் பாலா சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 25 Feb 2020, 3:09 pm
தலைவி படத்தில் வேலை பார்த்த தனக்கு ஏ.எல். விஜய் நம்பிக்கைத் துரோகம் செய்து முதுகில் குத்திவிட்டதாக பிரபல எழுத்தாளர் அஜயன் பாலா சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil thalaivi issueajayan bala accuses al vijay of cheating him
விஜய் துரோகம் செய்துட்டார், முதுகில் குத்திட்டார்: பிரபல எழுத்தாளர் குமுறல்



தலைவி

பிரபல எழுத்தாளரான அஜயன் பாலா இயக்குநர் ஏ.எல். விஜய்யின் நெருங்கிய நண்பர் ஆவார். விஜய் இயக்கிய தியா மற்றும் லட்சுமி படங்களுக்கு வசனம் எழுதிய அஜயன் பாலா தற்போது தயாராகி வரும் தலைவி பட விவாதத்திலும் ஒரு பங்காக இருந்தார். இந்நிலையில் நேற்று வெளியான தலைவி செகண்ட் லுக் போஸ்டரில் அஜயன் பாலாவின் பெயர் இல்லை. இதையடுத்து அவர் இது குறித்து ஃபேஸ்புக் பக்கத்தில் தனது குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.

நம்பிக்கை துரோகம்

சினிமாவில் நம்பிக்கைத் துரோகத்தைப் பலமுறை சந்திருந்திருந்தாலும் தலைவி படம் மூலமாக எனக்கு நேர்ந்திருக்கும் அவமானத்தை ஏற்கவே முடியவில்லை. இத்தனைக்கும் நான் 6 மாத காலம் ஆய்வு செய்து எழுதிக் கொடுத்த நாவலை அடிப்படையாக வைத்து நீதிமன்ற வழக்குகளில் ஆதாரமாகப் பயன்படுத்திக் கொண்டு வழக்கில் வெற்றி பெற்ற பின் என் பெயரைச் சுத்தமாக நீக்கிவிட்டார்கள் என்று அஜயன் தெரிவித்துள்ளார்.

முதுகு குத்தல்

திரைக்கதையில் வணிக நோக்கில் உண்மைக்குப் புறம்பாக மறைந்த தலைவர்களைக் கொச்சைப்படுத்தும் காட்சிகளை நான் நீக்கும்படி கோரிக்கை வைத்தது தான் நான் அவமானப்படுத்தப்படக் காரணம். பத்தாண்டு நட்புக்காக இயக்குநர் விஜய்யிடம் பல இழப்புகளையும் துரோகங்களையும் அனுமதித்துக் கொண்டேன். இதை என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை ஆய்வு எழுத்து தொடர்ந்து பல்வேறு கட்டங்களில் திரைக்கதை விவாதம் என ஒன்றரை வருட உழைப்புக்குக் கிடைத்த பலன் முதுகு குத்தல் தான் என்கிறார் அஜயன்.

ஏ.எல். விஜய்

இத்தனைக்கும் முந்தின நாள் கூட பேசினேன். அப்போது கூட இது பற்றி வாய் திறக்காத நண்பர் விஜய், அடுத்த நாள் எனக்குக் கிடைக்கப்போகும் அவமானத்தை எண்ணி அகமகிழ்ந்திருப்பார் போல. இப்படி எழுதியதால் எனக்கு முறையாகச் சேர வேண்டிய சம்பளப் பாக்கி கொடுக்க மாட்டார்கள். நட்பிற்காகக் கூட சினிமாவில் முறையான ஒப்பந்தமில்லாமல் யாரும் பணி புரிய வேண்டாம். இதுவே சக எழுத்தாளர்களுக்கு இதன் மூலம் நான் கேட்டுக்கொள்ளும் கோரிக்கை என்று அஜயன் பாலா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் போஸ்ட் போட்டுவிட்டு பின்னர் அதை நீக்கிவிட்டார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்