ஆப்நகரம்

கருப்பு வெள்ளை பேரழகு ஸ்ரீவித்யா பிறந்த நாள் இன்று!!

கமல் ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோருடன் இணைந்து பல படங்களில் நடித்து நடிகை ஸ்ரீவித்யாவின் பிறந்த தினம் இன்று.

Samayam Tamil 24 Jul 2019, 2:42 pm
ஸ்ரீ வித்யாவை நினைக்கும் போதே ‘அதிசய ராகம், அபூர்வ ராகம் என்ற பாடலும் அதில் அவர் கண்களின் பேரெழிலும் நடிப்பாற்றலும் நம் கண்முன் தோன்றும். அந்தச் சிறப்புமிகு நடிகை இன்று இல்லை. புற்று நோய் முற்றியதால் அவர் அக். 19 அன்று மறைந்தார். மறையும் போது அவருக்கு வயது 53. தன்னுடைய 13வது வயதில் ‘திருவருட்செல்வர் படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானவர் ஸ்ரீவித்யா நடிகர் திலகம் சிவாஜி கணேசன், கமல், ரஜினி, விஜயகாந்த், சரத்குமார், பிரபு, விஜய், அஜித் உள்ளிட்ட பல நடிகர்களுடன் சுமார் 900க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
Samayam Tamil sri


Nerkonda Paarvai: இன்னும் போனியாகாததால் தயாரிப்பாளர் மீது கடும் கோபத்தில் தல அஜித்!!

‘சட்டம்பிக்காவல்’ என்ற படத்தின் மூலம் மலையாளத் திரையுலகுக்கு அறிமுகமான இவர், மலையாளத்தில் மட்டும் 200 படங்களில் நடித்துள்ளார். ‘இமயம்’, ‘அபூர்வ ராகங்கள்’, ‘புன்னகை மன்னன்’, ‘அபூர்வ சகோதரர்கள்’, ‘காதலுக்கு மரியாதை’, ‘தளபதி’, ‘நம்மவர்’ உள்ளிட்ட ஏராளமான வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். கமல் இவரைக் காதலித்தார் எனும் வதந்தி பல வருடங்களாக சுற்றி வந்தது. ஆனால் போன வருடம் ஒரு பேட்டியில் இதில் இனி என்ன ரகசியம் அவர் காதலி தான் என ஒத்துக்கொண்டார்.

ஹாயா பீச்சுல காத்து வாங்கும் பிரியா பவானி சங்கர்: வைரலாகும் அழகான புகைப்படங்கள்!

மறுக்க முடியாத கலைச்சேவை செய்திருக்கும் அவருக்கு அவர் இறந்த போது கேரள அரசு மரியாதையை தந்தது குறிப்பிடத்தக்கது.

Dear Comrade: அதுக்கு மட்டும் ஒத்துக் கொள்ள மாட்டேன் - ராஷ்மிகா மந்தனா!!

அடுத்த செய்தி

டிரெண்டிங்