ஆப்நகரம்

Vijay புள்ளிங்கோ எல்லாம் ரெடியா?: இன்று டபுள் ட்ரீட்டாமே

விஜய் ரசிகர்களுக்கு இன்று ஒரு இன்ப அதிர்ச்சி கிடைத்துவிட்டது. அடுத்ததற்காக மரண வெயிட்டிங்.

Samayam Tamil 31 Dec 2019, 5:22 pm
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடித்து வரும் படம் தளபதி 64. அந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்பட்டது. படத்திற்கு மாஸ்டர் என்று தலைப்பு வைத்துள்ளனர்.
Samayam Tamil thalapathy 64


இந்நிலையில் விஜய் ரசிகர்களுக்கு புத்தாண்டு பரிசு கொடுக்க தளபதி 64 படக்குழு திட்டமிட்டுள்ளதாம். நள்ளிரவு 12 மணிக்கு செகண்ட் லுக் போஸ்டரை வெளியிட முடிவு செய்துள்ளார்களாம். இரண்டாவது போஸ்டரில் விஜய்யும் அவரின் வில்லன் விஜய் சேதுபதியும் இருப்பார்களாம்.

எப்படியும் அனைவரும் இன்று இரவு 12 மணிக்கு விழித்திருப்பார்கள் என்பதால் செகண்ட் லுக் போஸ்டர் வந்தால் அதை உடனே பார்த்துவிடுவார்கள்.



Rajinikanth விஜய்க்கு சொன்னாங்க நடக்கல, உங்களுக்கும் நடக்காது: ரஜினியிடம் கூறிய முருகதாஸ்

தளபதி 64 படத்தின் ஷூட்டிங் ஷிவமோகாவில் நடந்து வருகிறது. படத்தில் விஜய் பேராசிரியராக நடிப்பதாக கூறப்படுகிறது. ஆனால் படம் குறித்து எதையும் தெரிவிக்க மாட்டேன் என்று அடம் பிடிக்கிறார் லோகேஷ்.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்தால் விஜய் ரொம்ப சீரியஸான மாஸ்டராக இருப்பார் போன்று. லோகேஷ் கனகராஜ் அப்டேட் எதுவும் கொடுக்காமல் வேலை செய்வதாலேயே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

வாங்க தல, அஜித்துக்கு அழைப்பு விடுத்த ட்விட்டர்: வாய்ப்பில்ல ராஜா

எது எப்படியோ இருக்கு இன்று இரவு இன்னொரு ட்ரீட் இருக்கு, தயாராகுங்க ரசிகாஸ்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்