ஆப்நகரம்

சம்பளத்தை குறைத்த விஜய், முருகதாஸ்? தளபதி 65 படத்தின் மொத்த பட்ஜெட் இத்தனை கோடியா

தளபதி 65 படத்தின் ஆபிஸ் பூஜை விரைவில் நடைபெற உள்ளது என தகவல் பரவி வருகிறது.

Samayam Tamil 19 Aug 2020, 5:18 pm
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துவிட்டார். அந்த படமும் ரிலீஸுக்கு தயாராகவே இருக்கிறது. தியேட்டர்கள் எப்போது திறக்கிறது என்பதைப் பொருத்து அந்த படம் 2020 தீபாவளி அல்லது 2021 பொங்கலுக்கு ரிலீஸ் செய்யப்படும் என தயாரிப்பாளர் தெரிவித்து இருக்கிறார்.
Samayam Tamil Vijay


அடுத்து விஜய் தளபதி 65 படத்திற்காக சன் பிக்சர்ஸ் உடன் கூட்டணி சேர்ந்திருக்கிறார். இந்த படத்தின் ஏ ஆர் முருகதாஸ் இயக்க உள்ளார் என பல மாதங்களாக கூறப்பட்டு வருகிறது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் தற்போது வரை வெளிவராமல் இருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் விஜய்க்கு ஏ. ஆர். முருகதாஸ் முழு கதையையும் கூறினார் என்றும் அதற்குப் பிறகு தளபதி 65 படத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது என்றும் தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.

தளபதி விஜய் மற்றும் ஏ.ஆர். முருகதாஸ் இணைவது இது நான்காவது முறை. இதற்கு முன்பு துப்பாக்கி, கத்தி மற்றும் சர்க்கார் ஆகிய படங்களில் அவர்கள் இணைந்து பணியாற்றி இருக்கிறார்கள். அந்த மூன்று படங்களுமே பாக்ஸ் ஆபீஸில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் மீண்டும் இணையும் தளபதி 65 படத்தில் தமன் இசை அமைக்க உள்ளார். மேலும் சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவாளராக பணியாற்ற உள்ளார் என்றும் தகவல் வந்துள்ளது. மேலும் ஹீரோயினாக மடோனா செபஸ்டியன் நடிக்கலாம் என முன்பு கிசுகிசுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஹீரோயின் யார் என்பது அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானால் தான் உறுதியாகும். ரஷ்மிகா, பூஜா ஹெக்டே, காஜல் போன்ற நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

பிரபல எழுத்தாளர் ஆர் செல்வராஜ் தளபதி 65 படத்திற்காக திரைக்கதை எழுதும் பணிகளில் ஈடுபட உள்ளார் என்று சில தினங்களுக்கு முன்பு தகவல் வந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் தளபதி 65 படத்தின் பட்ஜெட் பற்றிய ஒரு தகவல் ஒன்றும் தற்போது உலா வருகிறது. அதன்படி மொத்த படத்தின் பட்ஜெட் 130 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது. இதில் விஜய்க்கு மட்டும் 70 கோடி ரூபாய் சம்பளமாக தரப்படுகிறது. மாஸ்டர் படத்திற்காக அவர் 80 கோடி ரூபாய் சம்பளம் பெற்றது குறிப்பிடத்தக்கது. தற்போது அடுத்த படத்திற்காக அவர் 10 கோடி குறைவாகவே சம்பளமாக வாங்கப் போகிறார் என்று கூறப்படுகிறது. மேலும் முருகதாஸ் சம்பளமாக 10 கோடி ரூபாய் பெற உள்ளார் என்றும், இதன் மூலமாக இயக்குனர் முருகதாஸ் மற்றும் விஜய் சம்பளம் சேர்த்து 80 கோடி ரூபாய் ஆகிறது. மீதமுள்ள 50 கோடி ரூபாய் செலவில் தான் மொத்த படமும் உருவாக உள்ளது என்று கோலிவுட் வட்டாரத்தில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இருப்பினும் இது பற்றிய உறுதியான தகவல் எதுவும் வெளிவரவில்லை.

மேலும் வரும் விநாயகர் சதுர்த்தி அன்று தளபதி 65 ஆபிஸ் பூஜை நடைபெற உள்ளது என்றும் கூறப்படுகிறது. அது உண்மை என்றால் அன்று இந்த படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

என்னையும், ரஜினி சாரையும் தவிர எல்லோரும் ஓடிட்டாங்க: பிக் பாஸ் சாக்ஷி

அடுத்த செய்தி

டிரெண்டிங்