ஆப்நகரம்

பீஸ்ட் ஹீரோயினுக்கு இழப்பு, ரஷ்மிகாவுக்கு குஷி

பீஸ்ட் பட ஹீரோயின் பூஜா ஹெக்டே தன்னை தேடி வந்த அருமையான வாய்ப்பை ஏற்க முடியாமல் போய்விட்டது.

Samayam Tamil 12 Apr 2022, 1:09 pm

ஹைலைட்ஸ்:

  • நாளை ரிலீஸாகும் பீஸ்ட்
  • தளபதி 66 பற்றி பேசிய பூஜா ஹெக்டே
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil rashmika
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் நடித்திருக்கும் பீஸ்ட் படம் நாளை ரிலீஸாகவிருக்கிறது. பீஸ்ட்டை அடுத்து தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார் விஜய்.
பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது. தளபதி 66 படத்தில் விஜய்க்கு ஜோடியாக அவரின் தீவிர ரசிகையான ரஷ்மிகா மந்தனா நடிக்கிறார். பூஜையில் விஜய்யை பார்த்ததும் அவருக்கு திருஷ்டி எடுத்தார் ரஷ்மிகா. அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி வைரலானது.

இந்நிலையில் தளபதி 66 படத்திலும் பூஜா ஹெக்டேவை தான் நடிக்க வைக்க முடிவு செய்திருக்கிறார்கள். ஆனால் அவரால் நடிக்க முடியாமல் போனது பற்றி தெரிய வந்துள்ளது.

தளபதி 66 படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு பேட்டி ஒன்றில் கூறியதாவது,

தளபதி 66 படத்திற்கு பூஜா ஹெக்டேவை தான் தேர்வு செய்தோம். ஆனால் பூஜா அடுத்தடுத்து சூப்பர் ஸ்டார்களுடன் நடித்து வருவதால் அவரை ஒப்பந்தம் செய்ய முடியவில்லை என்றார்.

அதே பேட்டியில் பூஜா ஹெக்டே கூறியதாவது,

தளபதி 66 படம் குறித்து என்னிடம் பேசினார்கள். ஆனால் டேட்ஸ் பிரச்சனையால் என்னால் அந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ள முடியவில்லை என்றார்.

பீஸ்ட் படத்தின் முதல் நாள் முதல் காட்சியை தியேட்டரில் பார்த்து ரசிக்க காத்துக் கொண்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்