ஆப்நகரம்

Thalapathy 67: ரிலீசுக்கு முன்பே சம்பவம் செய்த 'தளபதி 67': வெளியான அதிரடி அறிவிப்பு.!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'தளபதி 67' படத்தின் டிஜிட்டல் மற்றும் சேட்டிலைட் உரிமம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Authored byஆஷிக் முகமது | Samayam Tamil 2 Feb 2023, 6:50 pm
விஜய் ரசிகர்களுக்கு தொடர்ச்சியாக மூன்று நாட்கள் சர்ப்ரைஸ் ட்ரீட்டாக அமைந்துள்ளது. கோலிவுட்டே எதிர்பார்த்த 'தளபதி 67' படம் குறித்த அப்டேட்கள் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது. இந்நிலையில் தற்போது 'தளபதி 67' படத்தின் சேட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
Samayam Tamil Thalapathy 67
Thalapathy 67


கடந்த மாதம் வெளியான 'வாரிசு' ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. நீண்ட இடைவேளைக்கு பிறகு பேமிலி சென்டிமென்ட் கதையம்சத்தில் நடித்துள்ளார் விஜய். தமிழ், தெலுங்கு மொழியில் வெளியான இந்தப்படத்தை வம்சி பைடிபல்லி இயக்கினார். தில் ராஜு தயாரித்திருத்த இந்தப்படத்திற்கு தமன் இசையமைத்திருந்தார்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்த இந்தப்படத்தில் சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், எஸ்.ஜே. சூர்யா, ஷாம், ஸ்ரீகாந்த், சங்கீதா ஜெயசுதா, யோகிபாபு, ஸ்ரீமன், ஜான் விஜய், விடிவி கணேஷ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் விஜய்யுடன் இணைந்து நடித்தனர். கடந்த 11 ஆம் தேதி வெளியான இந்தப்படம் பாக்ஸ் ஆபிசில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்து வருகிறது.

Karthi: பிரம்மாண்டமாக உருவாகும் 'பையா 2': கார்த்திக்கு பதிலாக களமிறங்கும் பிரபல ஹீரோ.!

இந்நிலையில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த 'தளபதி 67' குறித்து அறிவிப்பு நேற்று முன்தினம் வெளியானது. செவன் ஸ்கீரின் ஸ்டுடியோ தயாரிக்கும் இந்தப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். 'மாஸ்டர்' படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது முறையாக விஜய்யை இயக்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ். 'விக்ரம் படத்தின் ஸ்டண்ட் இயக்குனராக பணிபுரிந்த அன்பறிவ் இந்தப்படத்திற்கு சண்டைக்காட்சிகள் அமைக்கிறார்.

Pathu Thala: நம்ம சத்தம்.. அதிரடியாக ஆட்டத்தை ஆரம்பித்த சிம்பு: தெறிக்கும் இணையம்.!

மேலும், சஞ்சய் தத், மிஷ்கின், கெளதம் மேனன், பிரியா ஆனந்த், மேத்யூ தாமஸ், அர்ஜுன், மன்சூர் அலிகான், மற்றும் சாண்டி உள்ளிட்டோர் நடித்து வருவது குறித்தும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. அத்துடன் சுமார் 14 வருடங்களுக்கு பிறகு விஜய், திரிஷா கூட்டணி 'தளபதி 67' படத்தில் நடிக்கின்றனர். இந்நிலையில் 'தளபதி 7' படத்தின் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமம் தொடர்பான அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.


அதன்படி சாட்டிலைட் உரிமத்தை சன் டிவியும், டிஜிட்டல் - ஓ.டி.டி. வெளியீட்டு உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனமும் கைப்பற்றியுள்ளது. மேலும், ஆடியோ வெளியீட்டு உரிமையை சோனி மியூசிக் பெற்றுள்ளது. மிகப்பெரிய தொகைக்கு இந்த உரிமம் விற்பனையாகியுள்ளதாக கூறப்படுகிறது. 'தளபதி 67' படக்குழுவினர் தற்போது காஷ்மீரில் படப்பிடிப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

எழுத்தாளர் பற்றி
ஆஷிக் முகமது
நான் ஆசிக் முகமது. ஊடகத்துறையில் கடந்த நான்கு வருடமாக பணியாற்றி வருகிறேன். எழுத்தின் மீதிருந்த ஆர்வத்தால் இந்த துறையை தேர்ந்தெடுத்தேன். அரசியல், கவிதை, சினிமாவில் ஆர்வம் கொண்ட நான், தற்போது டைம்ஸ் ஆப் இந்தியாவின் சமயம் தமிழ் இணைய ஊடகத்தில் சினிமா சம்பந்தமான கட்டுரைகள் எழுதி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்