ஆப்நகரம்

Bigil: பிளக்ஸ் பேனருக்குப் பதிலாக 12 சிசிடிவி கேமரா வைத்துக்கொடுத்த விஜய் ரசிகர்கள்!

பிகில் படம் வெளியாகவுள்ள நிலையில், விஜய்க்கு பிளக்ஸ் பேனர் வைப்பதற்கு பதிலாக விஜய் ரசிகர்கள் 12 சிசிடிவி கேமரா வைத்துக் கொடுத்துள்ளனர்.

Samayam Tamil 22 Oct 2019, 5:28 pm
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் பிகில். பெண்களின் கால்பந்து விளையாட்டை மையப்படுத்திய இப்படத்தில், விஜய் மீன் வியாபாரி, கால்பந்து கோச்சர், கால்பந்து விளையாட்டு வீரர் என்று 3 விதமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். வரும் 25 ஆம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது.
Samayam Tamil Bigil


இந்த நிலையில், சினிமா பிரபலங்கள் முதல் அரசியல் பிரபலங்கள் வரை இனிமேல் பேனர் வைப்பதில்லை என்று முடிவெடுத்துள்ளனர். அதன்படி, நம்ம வீட்டுப்பிள்ளை, அசுரன் உள்பட இதுவரை வெளியான படங்களுக்கு ரசிகர்கள் யாரும் பேனர் வைக்கவில்லை. இதற்கு காரணம், அண்மையில், தமிழகத்தை உலுக்கிய சுபஸ்ரீ மரணம்தான்.

Vijay: விஜய் விபூதி பூசினால் என்ன, சிலுவை அணிந்தால் உங்களுக்கு என்னய்யா? எஸ்.வி.சேகர்!

டூவீலரில் சென்று கொண்டிருந்த சுபஸ்ரீ பேனர் விழுந்ததில் நிலை தடுமாறி சாலையில் விழுந்தார். அப்போது பின்புறம் வந்த தண்ணீர் லாரி அவர் மீது ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்த சம்பவம்தான், இனிமேல் யாரும் பேனர் வைக்கமாட்டோம் என்ற முடிவிற்கு வந்ததற்கு முக்கிய காரணமாக அமைந்தது.


இந்த நிலையில், பேனர், கட் அவுட் ஆகியவை வைப்பதற்கு ஆகும் செலவை குறைத்து இந்த சமூகத்திற்கு பலனளிக்கும் வகையில், விஜய் ரசிகர்கள் 12 சிசிடிவி கேமராக்கள் அமைத்துக் கொடுத்துள்ளனர். இது குறித்து திருநெல்வேலி மாவட்ட துணை ஆணையாளர் அர்ஜுன் சரவணன் கூறுகையில், கட் அவுட் பிளக்ஸ் பேனர் வைப்பதற்கு பதிலாக சமுதாயத்திற்கு பயனளிக்கும் வகையில், ஏதேனும் செய்ய வேண்டுமென விஜய் நற்பணி இயக்க நிர்வாகிகள் என்னை அணுகினர்.

உனக்கு அதிர்ஷ்டம் இருக்கு, அறிவு இல்ல போ: விஜய் ரசிகரை கலாய்த்த எஸ்.ஆர். பிரபு

அவர்கள் கேட்டுக்கொண்டதற்கு ஏற்பவும், காவல்துறை ஆலோசனைப்படியும், நெல்லை மீனாட்சிபுரம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்பட 4 இடங்களில் சிசிடிவி மற்றும் மானிட்டர் அமைத்து கொடுத்துள்ளனர் என்றார்.

பிகில் சிறப்பு காட்சிக்கு அனுமதி இல்லை: அமைச்சர் கடம்பூர் ராஜு

மேலும், கூறுகையில், நெல்லை விஜய் ரசிகர்கள் தமிழ்நாடு முழுவதும் உள்ள அவரது ரசிகர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கின்றனர். பெண்கள் பாதுகாப்பிற்காக சிசிடிவி அமைத்து கொடுத்துள்ளனர். சிசிடிவி கேமரா அமைத்துக் கொடுத்த விஜய் நண்பணி இயக்கத்திற்கு நன்றி.

இதன் மூலம் பிரச்சனைகள் குறைந்து படிப்பில் கவனம் செலுத்த முடியும். பெண் குழந்தைகள் எந்த நேரத்திலும் காவல்துறை உதவி தேவைப்பட்டால் 1098 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்