ஆப்நகரம்

டீசரில் 3 விஜய்: பழமொழியா பேசித் தள்ளும் தளபதி!

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த மெர்சல் படத்தின் டீசர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

TNN 21 Sep 2017, 6:29 pm
அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த மெர்சல் படத்தின் டீசர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
Samayam Tamil thalapathy vijay mersal movie teaser released
டீசரில் 3 விஜய்: பழமொழியா பேசித் தள்ளும் தளபதி!


அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மெர்சல் வரும் தீபாவளிக்கு திரைக்கு வரவுள்ளது. இந்த நிலையில், மெர்சல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் முதல் சிங்கிள் டிராக், இசை வெளியீடு என்று சாதனை படைத்து வந்த நிலையில், தற்போது அட்லி பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியுள்ள மெர்சல் படத்தின் டீசரும் வெளியாகியுள்ளது. இந்த டீசரில் அப்பா விஜய், மேஜிக் மேன் விஜய், மருத்துவர் விஜய் அனைவரும் இடம் பெற்றுள்ளனர். ஹீரோயின்கள் யாரும் இடம் பெறவில்லை.

#PeaceBro #MersalTeaser #TSL100 https://t.co/WfLZcyw1Fa — Sri Thenandal Films (@ThenandalFilms) September 21, 2017 அதோடு நீ பற்ற வைத்த நெருப்பெல்லாம், பற்றி எறிய உன்னை கேட்கும், நீ விதைத்த வினையெல்லாம் உன்னை அறுக்க காத்திருக்கும்- பீஸ் புரோ என்று பழமொழி பேசும் விதமாக இந்த டீசர் அமைந்துள்ளது. தொடர்ந்து மெர்சல் சாதனை படைத்து வரும் நிலையில், இந்த டீசரும் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Thalapathy Vijay mersal movie teaser released..

READ MORE: MERSAL TEASER.

அடுத்த செய்தி

டிரெண்டிங்