ஆப்நகரம்

சாய்ராம் கல்லூரியில் பிகில் இசை வெளியீடு?

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் படத்தின் இசை வெளியீடு தாம்பரத்தில் உள்ள சாய்ராம் கல்லூரியில் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 10 Sep 2019, 8:09 pm
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் பிகில். இப்படத்தின், இசை வெளியீடு, டீசர், டிரைலருக்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில், வரும் 19 ஆம் தேதி சென்னை தாம்பரம் பகுதியில் உள்ள சாய்ராம் கல்லூரியில் பிகில் படத்தின் இசை வெளியீடு நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Samayam Tamil Thalapathy Vijay


வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. கால்பந்து விளையாட்டை மையப்படுத்திய இப்படத்தில், விஜய், அப்பா – மகன் என்று இரு வேடங்களில் நடித்துள்ளார். இதில், விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும், விவேக், யோகி பாபு, டேனியல் பாலாஜி, கதிர், ஜாக்கி ஷெராஃப், இந்துஜா ஆகியோர் உள்பட பலர் நடித்துள்ளனர்.

இதையும் படிங்க: இந்திய சினிமா வரலாற்றில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடும் கிரிக்கெட் வீரர்!

Also Read This: DivyaBharathi: ஹீரோயினாக அறிமுகமாகும் கோயம்புத்தூர் மாடல்!

மேலும் படிக்க: சைலண்டா படப்பிடிப்பை தொடங்கிய தல? வைரலாகும் புகைப்படம்!

அண்மையில் இப்படத்தில் விஜய் பாடிய வெறித்தனம் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. அதற்கு முன்னதாக பெண்களை மையப்படுத்திய சிங்கப் பெண்ணே என்ற பாடல் வெளியாகி ரசிகர்களிடையே மாஸ் காட்டியது.

தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் படத்திற்கு போட்டியாக விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சங்கத்தமிழன் முதலில் வெளியாகும் என்று கூறப்பட்டது. அதன் பிறகு இப்படத்தின் வெளியீட்டு தேதி தள்ளி வைக்கப்பட்டது. இதே போன்று தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள நம்ம வீட்டுப்பிள்ளை படம் வரும் அக்டோபர் மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே அக்டோபர் 4ம் தேதி தனுஷின் அசுரன் வெளியாகவுள்ளது. அக்டோபர் 7ம் தேதி ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. 27ம் தேதி தீபாவளி பண்டிகை. இப்படி, பண்டிகையாக வருவதால், அசுரன் வெளியீட்டைத் தொடர்ந்து ஆயுத பூஜையை முன்னிட்டு நம்ம வீட்டுப்பிள்ளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படியில்லை என்றால், பிகில் படத்திற்கு போட்டியாக வெளியாகும் என்று தகவல் தெரிவிக்கின்றது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்