ஆப்நகரம்

பிகில் முதல் நாள் முதல் ஷோ பார்க்க முடியாமல் வருத்தப்பட்ட நடிகர் சிபிராஜ்!

விஜய் நடிப்பில் இன்று திரைக்கு வந்துள்ள பிகில் படம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், கண்டிப்பாக பிளாக்பஸ்டர் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

Samayam Tamil 25 Oct 2019, 1:27 pm
தெறி, பிகில் ஆகிய படங்களைத் தொடர்ந்து அட்லி – விஜய் கூட்டணியில் 3 ஆவது முறையாக உருவாகியுள்ள படம் பிகில். இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. கால்பந்து விளையாட்டை மையப்படுத்திய இப்படத்தில் விஜய், ராயப்பன், மைக்கேல், பிகில் என்று 3 கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
Samayam Tamil Thalapathy Vijay Bigil


பிகில், முதல் நாளில் ரூ.100 கோடி வசூல் குவித்து புதிய உலக சாதனை படைக்குமா?

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்துள்ள இப்படத்திற்கு முதலில் சிறப்பு காட்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதன் பிறகு அரசிடம் சிறப்புக் காட்சிக்கு தயாரிப்பாளர்கள் கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்ற அரசு, இன்று ஒருநாள் மட்டும் சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளித்தனது. அதன்படி, தமிழகம் முழுவதும் 5 மணிக்கு முதல் நாள் முதல் காட்சி திரையிடப்பட்டுள்ளது. இரவு முழுவதும் காத்திருந்த ரசிகர்களுக்கு ராயப்பனின் தரிசனம் 5 மணிக்கு கிடைத்துள்ளது.

Bigil review: ஸ்லோவா போனாலும் விஜய் ரசிகர்களுக்கு ஃபுல் ட்ரீட்- பிகில் விமர்சனம்

வழக்கம் போல் இந்தப் படமும் திருட்டுக் கதை வழக்கில் நீதிமன்றம் வரை சென்றுள்ளது. எனினும், இதுவரை இந்தப் படத்திற்கு தடை விதிக்கப்படவில்லை. இயக்குநர் கேபி செல்வா என்பவரும், சூளைமேட்டைச் சேர்ந்த அம்ஜத் மீரான் என்பவரும் பிகில், தங்களது கதை என்று உரிமை கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில், பல தடைகளையும் தாண்டி இன்று உலகம் முழுவதும் பிகில் படம் வெளியாகியுள்ளது. இந்தப் படத்திற்கு ட்விட்டரில் ரசிகர்கள் விமர்சனம் கொடுத்திருக்கிறார்கள் என்று இங்கு பார்ப்போம்.

Thalapathy Vijay: விஜய்யின் பிகில் வெற்றியடைய வாழ்த்து கூறிய பிரபலங்கள்!

















அடுத்த செய்தி

டிரெண்டிங்