ஆப்நகரம்

Bigil: சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய பிகில்: இதோ சேம்பிள் வீடியோ!

விஜய், நயன்தாரா நடித்த பிகில் படம் அண்மையில் வெளியாகி வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

Samayam Tamil 2 Nov 2019, 3:38 pm
விஜய், நயன்தாரா ஆகியோர் முன்னணி ரோலில் நடித்துள்ள படம் பிகில். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்து உலகம் முழுவதும் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் குவித்து வருகிறது. தமிழகத்தில் மட்டும் ரு.100 கோடிக்கும் அதிகமாக வசூல் ஈட்டியுள்ளது என்று ஸ்கிரீன் சீன் மீடியா நிறுவனத்தின் தயாரிப்பாளர் சுந்தர் ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil Vijay Bigil


Happy Birthday Shahrukh Khan: 12 மணிக்கு ஷாருக்கான் வீட்டு முன்பு குவிந்த ரசிகர்கள்!

இந்த நிலையில், பிகில் படத்தில் வரும் சிங்கப்பெண்ணே பாடல் மற்றும் பெண்களிடையே தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் விஜய் பேசும் வசனம் ஆகியவற்றிற்கு பெருமை சேர்க்கும் வகையில், இப்படிப்பட்ட பெண்கள் டிக் டாக் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பிகில் படத்தில் அனிதாவாக வரும், நடிகை ரெபா மோனிகா ஜானுக்கு முகத்தில் ஆசிட் வீசப்பட்டு அவது ஒரு பக்கம் காயமடைந்த நிலையில் வீட்டிற்குள்ளாகவே முடங்கியிருப்பார். அவரைப் பார்த்து கால்பந்து விளையாட அழைக்கச் செல்லும், அவரிடம் திறமைக்கும், தன்னம்பிக்கைக்கும் முகம் தேவையில்லை என்று விஜய் டயலாக் பேசுவார்.

IFFI 2019: ரஜினிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிப்பு!

இந்த டயலாக்கை அனிதா, அவரது மீது ஆசிட் வீசிய ஒரு தலைக்காதலனிடம் கூறுவார். இதனையே முகம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒரு பெண் டிக் டாக் செய்யும் வீடியோ தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ்நாட்டில் மட்டும் ரூ.100 கோடிப்பு: சுந்தர் ஆறுமுகம்!

பிகில் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய், தனது 64 ஆவது படமான தளபதி 64 படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தில், அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். இப்படத்தின் 2 ஆம் கட்ட படப்பிடிப்பு நேற்று மாலை டெல்லியில் தொடங்கியுள்ளது. அங்கு 40 நாட்கள் படமாக்கப்பட இருக்கிறது. இதில், விஜய், விஜய் சேதுபதியின் சண்டைக் காட்சிகள் படமாக்கப்படுகிறது. இதற்காக படக்குழுவினருடன் டெல்லி சென்ற விஜய்யின் விமான நிலைய புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னதாக வட சென்னை பகுதியில் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது.





அடுத்த செய்தி

டிரெண்டிங்