ஆப்நகரம்

Thalapathy 63: பூஜையுடன் ப்ரீ - புரோடக்ஷன் பணியை தொடங்கிய தளபதி விஜய்!

சர்கார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தனது 63வது படத்தின் படப்பிடிப்பை தளபதி விஜய் பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளார்.

Samayam Tamil 14 Nov 2018, 12:20 pm
சர்கார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தனது 63வது படத்தின் படப்பிடிப்பை தளபதி விஜய் பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளார்.
Samayam Tamil vijay


இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் கடந்த 6ம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற படம் சர்கார். அரசியல் பின்னணிக் கதையை மையப்படுத்திய இப்படம் அரசியல் கட்சியினருரிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. எனினும், வசூல் ரீதியாக இப்படம் ரூ.200 கோடி வரை வசூல் குவித்துள்ளது.

இந்த நிலையில், இப்படத்தைத் தொடர்ந்து தனது 63ஆவது படத்திற்காக தளபதி விஜய் தெறி படத்தின் இயக்குனர் அட்லியுடன் 2ஆவது முறையாக இணைந்துள்ளார். இந்தக் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தை ஏஜிஎஸ் புரோடக்‌ஷன் நிறுவனம் தயாரிக்கிறது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு இன்று மைலாப்பூரில் உள்ள ஒரு கோயிலில் பூஜையுடன் தொடங்கியுள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram #NewBeginnings #Temple #PositiveEnergy 😊🙏🙏 This moment will always be precious ❤️ A post shared by Archana Kalpathi (@archanakalpathi) on Nov 13, 2018 at 8:51pm PST

வழக்கத்திற்கு மாறாக இப்படம், க்ரைம் – த்ரில்லர் கதையை மையப்படுத்திய படமாக உருவாகும் என்று தகவல் தெரிவிக்கின்றது. மேலும், இப்படத்தில் தளபதி விஜய் ஒரு சிபிஐ அதிகாரியாக நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்