ஆப்நகரம்

என் மகனுக்காக எந்த இடத்திலும் வாய்ப்பு கேட்டதில்லை: தம்பி ராமையா

தன் மகன் உமாபதி நடிப்பில் வெளியாகியுள்ள 'தண்ணி வண்டி' பட பிரச்சனை தொடர்பாக மெளனம் கலைத்துள்ளார் நடிகர் தம்பி ராமையா.

Samayam Tamil 12 Jan 2022, 10:45 am
தமிழில் பல முன்னணி நடிகர்களில் படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து பெயர் பெற்றவர் தம்பி ராமையா. குணச்சித்திர கதாபாத்திரத்தில் கலக்கும் இவரது மகன் உமாபதி ராமையா. இவர் நடிப்பில் சமீபத்தில் தண்ணி வண்டி என்ற படம் வெளியானது. இப்படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது.
Samayam Tamil Thambi Ramaiah
Thambi Ramaiah


இந்நிலையில் தண்ணி வண்டி படத்தின் தயாரிப்பாளர் சரவணன் அண்மையில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய சரவணன், கடந்த 2015 ஆம் ஆண்டு ஒரு படம் தயாரிக்க உத்தேசித்த போது, தம்பி ராமையா என்னை அணுகி தன்னுடைய மகனை நடிக்க வைத்தால் அனைத்து பொறுப்புகளையும் தானே ஏற்று கொள்வதாக வாக்குறுதி அளித்தார்.

இந்நிலையில் 'தண்ணி வண்டி' படத்தின் விளம்பரத்திற்காக தம்பி ராமையாவும், அவரது மகன் உமாபதி ராமையாவும் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை. இதற்கு நஷ்ட ஈடாக தம்பி ராமையா ரூபாய் 4 கோடி தரவேண்டும். இல்லையென்றால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் எனவும் தெரிவித்திருந்தார். மேலும் தம்பி ராமையா அவரது மகனை தவறான பாதையில் கொண்டு செல்வதாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.
'நாய் சேகர்' படத்திற்கு இலவச விளம்பரம் செய்த ராஷ்மிகா: நன்றி கூறிய சதீஷ்!
இந்நிலையில் இந்த பிரச்சனை குறித்து முதன்முறையாக தம்பி ராமையா பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, நான் என் மகனுக்காக எந்த இடத்திலும் வாய்ப்பு கேட்டது கிடையாது. நீயே போ, விழுந்து எழுந்து வாய்ப்பு தேடு என்று சொல்லிவிட்டேன். நான் அப்படித்தான் தேடினேன். உன் தோல்விதான் உன்னை உயர்த்தும் என்றேன். நான் நல்லா இருக்க காரணம் பிரபு சாலமன்தான். அவருக்காக ஒரு படத்தில் நடிக்க சென்றேன். அதனால் தான் தண்ணி வண்டி பிரச்சனைக்கு எதுவும் பேசவில்லை.

தண்ணி வண்டி படத்தின் இயக்குனரிடம் முதலில் சொன்னேன். எனது மகனின் சிறுத்தை சிவா என்ற படம் உருவாகி இருக்கிறது. அந்தப் படம் வெளியானதும் தண்ணி வண்டி படத்தை வெளியிடலாம் என்று சொன்னேன். ஆனால் அவர் மறுத்து விட்டார். என் மகன் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு கொரோனா பாதிக்கப்பட்டு உடல் எடை குறைந்து வந்தான். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவனது உடல் நிலை மிகவும் முக்கியம் அதனால் தான் தண்ணி வண்டி புரமோஷனில் அவர் கலந்து கொள்ள முடியவில்லை. இவ்வாறு தெரிவித்துள்ளார் தம்பி ராமையா.

அடுத்த செய்தி

டிரெண்டிங்