ஆப்நகரம்

’தானா சேர்ந்த கூட்டம்’ பாடல் டீசர் விரைவில் வெளியீடு..!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ திரைப்படத்தின் பாடல் டீசர் விரைவில் வெளியிடப்பட உள்ளது.

TNN 16 Apr 2017, 6:13 pm
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ திரைப்படத்தின் பாடல் டீசர் விரைவில் வெளியிடப்பட உள்ளது.
Samayam Tamil thana serntha kootam teaser will released soon
’தானா சேர்ந்த கூட்டம்’ பாடல் டீசர் விரைவில் வெளியீடு..!


விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு, ஏறக்குறைய முடிவடைந்துவிட்டது. இதனைத் தொடர்ந்து படத்தின் பாடல் டீசரை வெளியிட படக்குழுவினர் ஆயத்தமாகி வருவதாக கூறப்படுகிறது.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார் . எனவே ’நானும் ரெளடிதான்’ படத்தைப் போல, இந்த படத்தின் பாடல்களும் ஹிட்டடிக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். ’தானா சேர்ந்த கூட்டம் ’ படத்திற்கான பாடல் கம்போசிங்கின் போது எடுக்கப்பட்ட காட்சிகளை, தமிழ் புத்தாண்டு தினத்தன்று அனிருத் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

Surprise! #ThaanaaSerndhaKoottam single coming soon :) @Suriya_offl @VigneshShivN அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🙏 pic.twitter.com/5astrc939e — Anirudh Ravichander (@anirudhofficial) April 14, 2017 பிதா மகன் படத்திற்கு பிறகு சூர்யாவுக்கு சிறந்த நகைச்சுவை கதாபாத்திரம், இந்த படத்தில் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே சூர்யாவின் சமீபத்திய படங்களை விட, தானா சேர்ந்த கூட்டம் தனிக்கவனம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தில் சூர்யா தவிர, கீர்த்தி சுரேஷ், சுரேஷ் மேனன் ,தம்பி ராமையா,ரம்யா கிருஷ்ணன்,செந்தில் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Thana Serntha Kootam teaser will released soon

அடுத்த செய்தி

டிரெண்டிங்