ஆப்நகரம்

குடிபோதையில் வாகனம் ஓட்டிய நடிகர் ஜெய் சிறைக்கு செல்வாரா?

குடிபோதையில் கார் ஓட்டிய நடிகர் ஜெய்யின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படுவதோடு அவர் சிறைக்கும் செல்வார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

TNN 23 Sep 2017, 4:23 pm
குடிபோதையில் கார் ஓட்டிய நடிகர் ஜெய்யின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படுவதோடு அவர் சிறைக்கும் செல்வார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil the actor jai will be in prison for drunk and drive
குடிபோதையில் வாகனம் ஓட்டிய நடிகர் ஜெய் சிறைக்கு செல்வாரா?



சமீபத்தில் குடிபோதையில் நடிகர் ஜெய் கார் ஓட்டி அடையார் தடுப்பு பாலத்தில் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுதலையாகியுள்ளார்.

ஏற்கனவே இவர் கடந்த 2014ஆம் ஆண்டும் இதேபோல் குடிபோதையில் கார் ஓட்டி விபத்துக்குள்ளாக்கியுள்ளார்
என்பதால் இவருடைய டிரைவிங் லைசென்ஸை ஏன் ரத்து செய்யக்கூடாது என்று விளக்கம் கேட்டு திருவான்மியூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதற்கு ஜெய் அளித்த விளக்கம் போக்குவரத்து அதிகாரிகளுக்கு திருப்தியாக இல்லை. ஆகையால் அவருடைய லைசென்ஸ் ரத்தாக வாய்ப்பு உள்ளதாகவும் தெரிகிறது. அப்படி லைசென்ஸ் ரத்தானால் இனிமேல் ஜெய் கார் ஓட்டவே முடியாது என்றும் கூறப்படுகிறது. மேலும் சிறை தண்டனை பெறவும் வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.

the actor jai will be in prison for drunk and drive

அடுத்த செய்தி

டிரெண்டிங்