ஆப்நகரம்

மேடம் டூஸாட்ஸ் அருங்காட்சியத்தில் பிரபல நடிகைக்கு சிலை!

லண்டனில் உள்ள மேடம் டூஸாட்ஸ் அருங்காட்சியகத்தில், நடிகை தீபிகா படுகோனுக்கு மெழுகுச் சிலை வைக்கப்படவுள்ளது.

Samayam Tamil 25 Jul 2018, 5:54 pm
லண்டனில் உள்ள மேடம் டூஸாட்ஸ் அருங்காட்சியகத்தில், நடிகை தீபிகா படுகோனுக்கு மெழுகுச் சிலை வைக்கப்படவுள்ளது.
Samayam Tamil மேடம் டூஸாட்ஸ் அருங்காட்சியத்தில் பிரபல நடிகைக்கு சிலை!


நடிகை தீபிகா படுகோன், பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். இவர் பிஸியான நடிகையும் கூட. இந்நிலையில், இவர்பேஸ்புக் லைவ் மூலம் தனது ரசிகர்களுக்கு சந்தோஷமான செய்தியை கூறியுள்ளார். லண்டனில் உள்ள மேடம் டூஸாட்ஸ் அருங்காட்சியகக் கூடத்தில், தனது மெழுகுச்சிலையை அடுத்த வருடம் நிறுவ உள்ளதாகத் தெரிவித்தார்.

முதலில் லண்டனில் உள்ள கண்காட்சிக் கூடத்திலும், அதைத் தொடர்ந்து டெல்லியிலும் நிறுவ உள்ளதாகக் கூறினார். அதற்கான பணிகள் தற்போது நடைபெற்றுவருவதாகவும், அந்தக் குழுவினருடன் இருப்பது வித்தியாசமான அனுபவத்தைத் தருவதாகவும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இதற்காக, அருங்காட்சியகத்தைச் சேர்ந்த நிபுணர்கள், சிலை வடிப்பதற்காக தீபிகா படுகோனை அளவு எடுத்துள்ளனர். அவரது முகபாவனைகள் கச்சிதமாக இருக்க, தீபிகாவைப் பல்வேறு கோணங்களில் புகைப்படங்களும் எடுத்துச் சென்றுள்ளனர். இந்த புகைப்படங்களை தீபிகா தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்