ஆப்நகரம்

’தி ஹவுஸ் வித் ஏ கிளாக் இன் இட்ஸ் வால்ஸ்’ படத்தின் மிரட்டலான டிரெய்லர்

ஹாலிவுட் சினிமாவில் பல்வேறு வித கதை களத்துடன் திரைப்படங்களை உருவாக்கி வெற்றிக்கொடி நாட்டிய எலி ரோத் இயக்கத்தில் அடுத்து வெளிவரும் படம் ‘ தி ஹவுஸ் வித் ஏ கிளாக் இன் இட்ஸ் வால்ஸ்’ என்ற திரைப்படம்.

Samayam Tamil 2 Jul 2018, 4:39 pm
ஹாலிவுட் சினிமாவில் பல்வேறு வித கதை களத்துடன் திரைப்படங்களை உருவாக்கி வெற்றிக்கொடி நாட்டிய எலி ரோத் இயக்கத்தில் அடுத்து வெளிவரும் படம் ‘ தி ஹவுஸ் வித் ஏ கிளாக் இன் இட்ஸ் வால்ஸ்’ என்ற திரைப்படம்.
Samayam Tamil movie_trailer


குழந்தைகளுக்கு பிடித்த மாய தந்திரங்களுடன் அதிரடி, சாகசம் மற்றும் மாயஜால ஹாரர் நிறைந்த படமாக தயாராகியுள்ள ‘ தி ஹவுஸ் வித் ஏ கிளாக் இன் இட்ஸ் வால்ஸ்’.

ஹாலிவுட்டின் பாரம்பரியமிக்க 24 செஞ்சுரி ஃபாக்ஸ் தயாரித்திருக்கும் இந்த படத்தில் ஜேக் பிளாக், கேட் பிளான்செட், கையில் மெல்லக்லன், ரீனே, எலீஸ் கோல்டுஸ்பெரி உட்பட பல நடித்துள்ளனர்.


உலக அழிவதை தடுக்கும் ஜோனத்தன் பார்னவெல்ட் என்ற சூனியக்காரனுடன் இணைந்து ஒரு சிறுவன் செய்யும் சாகசங்கள் தான் ‘ தி ஹவுஸ் வித் ஏ கிளாக் இன் இட்ஸ் வால்ஸ்’ திரைப்படத்தின் மையக்கதை.

அதே பெயரில் எரிக் கிரிபிள் என்பவர் எழுதிய நாவலை மையப்படுத்தி இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது வெளியாகியுள்ள இந்த படத்தின் டிரெய்லர் சமூக வலைதளங்களில் வரவேற்பை பெற்றுள்ளது,

குழந்தை திரைப்பட ரசிகர்களை மய்யமாக வைத்து மிக பிரம்மாண்டமான பொருட் செலவில், கண்னை பறிக்கும் கிராஃபிக்ஸ் பணிகளுடன் தயாராகியுள்ள ‘ தி ஹவுஸ் வித் ஏ கிளாக் இன் இட்ஸ் வால்ஸ்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 14ம் தேதி திரைக்கு வருகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்