ஆப்நகரம்

’தி நன்’- ஹாலிவுட் சினிமாவில் மீண்டும் ஒரு ஹாரர் படம்

பேய், அது சார்ந்த அமானுஷ்யமான கதைகளுக்கு உலகளவில் ரசிகர்கள் வட்டம் மிக பெரியது. அதுபோன்ற களங்களை தேர்ந்தெடுத்து தயாரிக்கப்படும் படங்கள் பெரிய வரவேற்பை பெறுவதோடு,வசூல் குவிப்பதையும் தவறுவதில்லை.

Samayam Tamil 15 Jun 2018, 7:01 am
பேய், அது சார்ந்த அமானுஷ்யமான கதைகளுக்கு உலகளவில் ரசிகர்கள் வட்டம் மிக பெரியது. அதுபோன்ற களங்களை தேர்ந்தெடுத்து தயாரிக்கப்படும் படங்கள் பெரிய வரவேற்பை பெறுவதோடு,வசூல் குவிப்பதையும் தவறுவதில்லை.
Samayam Tamil the-nun-movie-header-conjuring-1103127-1280x0.
’தி நன்’- பட டிரெய்லர் வெளியீடு


அதை பின்பற்றி ஹாலிவுட்டில் வெளியான பல படங்கள் உலகளவில் ஹாரர் பட ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை வாரி குவித்தன. அதற்கு சமீபத்திய உதாரணமான ‘தி கான்ஜூரிங்’ , ’தி கான்ஜூரிங்க்- 2’ மற்றும் ’அனேபெல்’ போன்ற படங்களை கூறலாம்.

இந்நிலையில் இதே கதைக்களத்தை பின்பற்றி விரைவில் வெளிவரவுள்ள ஹாலிவுட் படம் தான் ‘தி நன்’. ‘தி கான்ஜூரிங்’, ’அனேபெல்’ படங்களின் கால்கட்டத்திற்கு முன்னதாக நடைபெற்ற திரைக்கதை அமைப்பில் ’தி நன்’ படம் தயாரிக்கப்பட்டுள்ளது.


காரின் ஹார்டி என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தில், டெமினியின் பிச்சீர், டைசா ஃபிராமிகா, ஜோனஸ் ப்ளோகெட், சார்லெட் ஹோப் போன்ற பலர் நடித்துள்ளனர். ’தி நன்’ படத்திற்கு கார் டாபர்மென் திரைகதை அமைத்துள்ளார்.

1952ம் ஆண்டு காலகட்டத்தில் நடக்கும் சம்பவங்களை தொகுத்து உருவாக்கப்பட்டுள்ள ‘தி நன்’ படத்தின் டிரெய்லர் தற்போது சமூகவலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

“கடைசி வரை பார்க்கவும்” என்ற எழுத்தோடு தொடங்கும் இந்த படத்தின் டிரெய்லர் நிஜமாகவே பயமுறுத்தும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 7ம் தேதி வெளிவரும் ’தி நன்’ திரைப்படம் ‘தி கான்ஜூரிங்’ , ’தி கான்ஜூரிங்க்- 2’ மற்றும் ’அனேபெல்’ படங்கள் வரிசையில் இதுவும் வெற்றியை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்