ஆப்நகரம்

பிக்பாஸில் ஜூலிதான்: கூறுவது நடிகர் சதீஷ்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜல்லிக்கட்டு ஜூலிதான் வெற்றியடைவார் என்று பிரபல நகைச்சுவை நடிகர் சதீஷ் தெரிவித்துள்ளார்.

TNN 10 Jul 2017, 3:02 pm
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜல்லிக்கட்டு ஜூலிதான் வெற்றியடைவார் என்று பிரபல நகைச்சுவை நடிகர் சதீஷ் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil the winner of big boss is julie says tamil comedian sathish
பிக்பாஸில் ஜூலிதான்: கூறுவது நடிகர் சதீஷ்


நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி பிரபல தனியார் தொலைக்காட்சியில் வெளியாகிவருகிறது. இந்த நிகழ்ச்சியில் என்னதான் நடக்கிறது என்று தெரிந்து கொள்ள பலரும் இன்று ஆவலாக உள்ளனர். நாள்தோறும் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் நிகழ்ச்சி நகர்ந்து கொண்டிருக்கிறது.

போட்டியாளர்களில் அதிக சர்ச்சைகளில் சிக்கியவர் ஜூலிதான். காயத்ரி ரகுராமன் மற்றும் நகைச்சுவை நடிகை ஆர்த்தி ஜூலியை வம்புக்கு இழுத்து அவரை வேண்டும் என்றே சர்ச்சையில் சிக்கவைத்து வருவதாக சமூகவலைதளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியில் ஒரே ஒருவர்தான் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார். இறுதிப்போட்டிக்கு இன்னும் அதிக நாட்கள் இருக்கும் நிலையில், பிக் பாஸின் வெற்றியாளர் ஜூலிதான் என திரைப்பட நகைச்சுவை நடிகர் சதீஷ் தனது டுவிட்டரில் கூறியுள்ளார். ஜூலி ஜெயிக்க போவதற்கு காரணம் ஆர்த்தி மற்றும் காயத்ரி ரகுராம்தான் எனவும் குறிப்பிட்டுள்ளார்.


the winner of big boss is julie says tamil comedian sathish!!

அடுத்த செய்தி

டிரெண்டிங்