ஆப்நகரம்

குறிப்பிட்ட மாவட்டங்களில் மட்டும் தியேட்டர்கள் மூடல்: தமிழக அரசு அறிவிப்பு

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் மக்கள் அதிகம் கூடும் தியேட்டர்கள் மற்றும் மால்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 15 Mar 2020, 12:31 pm
கேரளா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட பல மாநிலங்கள் தடை செய்துள்ள நிலையில் தற்போது தமிழ்நாட்டில் எல்லைபுற மாவட்டங்களில் மட்டும் தியேட்டர்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil Tamilnadu Theaters


எல்லை மாவட்டங்களான தேனி, கன்னியாகுமரி, திருப்பூர், கோயம்பத்தூர், கிருஷ்ணகிரி, நீலகிரி, திருநெல்வேலி, தென்காசி, திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, ஈரோடு, திண்டுக்கல், தர்மபுரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் எல்லையோர வட்டங்களில் (தாலுக்காகளில்) உள்ள தியேட்டர்கள் மற்றும் மால்களை மார்ச் 31ம் தேதி வரை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.

வெளிமாநிலங்களில் இருந்து கொரோனா பரவுவதை தடுக்க இந்த நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது. ஏற்கனவே எல்லை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தியேட்டர்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனால் இந்த வாரம் ரிலீஸ் ஆன படங்களும், அடுத்த வாரம் திரைக்கு வரவிருந்த படங்களும் கடுமையாக பாதிக்கப்படும் என கூறப்படுகிறது.

மேலும் இன்னும் மூன்று வாரங்கள் கழித்து விஜய் நடித்த மாஸ்டர் படம் ரிலீஸ் ஆகவுள்ளது. தியேட்டர்கள் திறக்க தடை தொடர்ந்தால் இந்த படமும் தள்ளிப்போக நேரும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலே குறிப்பிட்ட மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் தியேட்டர்கள் செயல்படும் என்றும், தூய்மை பணிகளை தீவிரமாக செயல்படுத்தவும் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்