ஆப்நகரம்

ஜிஎஸ்டியை எதிர்த்து சினிமா பிரபலங்கள் ஸ்டிரைக்

ஜிஎஸ்டி வரிவிதிப்பால், ரசிகர்களின் கூட்டம் குறைந்தாக கூறி தமிழ்,தெலுங்கு திரையுலகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர்.

TNN 23 Oct 2017, 3:56 pm
ஜிஎஸ்டி வரிவிதிப்பால், ரசிகர்களின் கூட்டம் குறைந்தாக கூறி தமிழ்,தெலுங்கு திரையுலகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர்.
Samayam Tamil theatre strike against gst
ஜிஎஸ்டியை எதிர்த்து சினிமா பிரபலங்கள் ஸ்டிரைக்


மத்திய அரசு ஜிஎஸ்டி வரி அமல்படுத்தியதையடுத்து சினிமா டிக்கெட் கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. தொடர்ந்து தமிழக அரசும் கேளிக்கை வர விவகாரத்தில் அழுத்தம் கொடுத்தால், 153 ரூபாய்க்கு விற்க்கப்பட்ட டிக்கெட் தற்போது 165 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

ஏற்கனவே திருட்டு இணையதள திரைப்படத்திற்கு மக்கள் கூட்டம் சென்று கொண்டிருந்த நிலையில், இந்த டிக்கெட் கட்டண உயர்வு, மக்களை மேலும், தியேட்டர்களுக்கு வர விடமால் செய்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

இந்நிலையில், ஜிஎஸ்டி வரிவிதிப்பால், ரசிகர்களின் கூட்டம் குறைந்ததற்கு எதரி்ப்பு தெரிவிக்கும் வகையில், தமிழ்,தெலுங்கு திரையுலகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர்.

வரும் நவம்பர் மாதம் முதல், அனைத்து படப்பிடிப்புகளையும் மற்ற பணிகளையும் நிறுத்தப் போவதாக தெலுங்கு திரையுலகத்தினர் வட்டாரத்தில் பேசி வருகின்றனர்.

இதற்கு ஆதரவாக தமிழ் திரையுலகத்தினரும் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்