ஆப்நகரம்

தியேட்டர் ஸ்டிரைக் தற்காலிகமாக வாபஸ்: நாளைக்கு சினிமாவுக்கு போகலாம்!

தமிழகத்தில் திரையரங்க உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.

TNN 6 Jul 2017, 6:28 pm
தமிழகத்தில் திரையரங்க உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.
Samayam Tamil theatre strike withdrawn after meeting with tamilnadu cm
தியேட்டர் ஸ்டிரைக் தற்காலிகமாக வாபஸ்: நாளைக்கு சினிமாவுக்கு போகலாம்!


கடந்த 1ம் தேதி முதல் நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்தது. இந்த வரியுடன் தமிழகத்தில் மட்டும் கேளிக்கை வரி 30 சதவீதம் அமலுக்கு வந்தது. இதை சினிமா தியேட்டர் உரிமையாளர்கள் கடுமையாக எதிர்த்து, மாநிலம் முழுவதும் 1000க்கும் அதிகமான தியேட்டர்களை மூடினர். கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும் என்றும் இதனால் சினிமா துறை சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும் தமிழக நிதித்துறை அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சினிமா தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன் தலைமையில் ஒரு குழுவினர் சந்தித்து பேசினர்.

ஆனால், பேச்சுவார்த்தை தோல்வியை சந்தித்த நிலையில், தொடர்ந்து 4வது நாளாக திரையரங்கம் மூடப்பட்ட நிலையில், இன்று மீண்டும் தமிழக முதல்வருடன் பேச்சுவார்த்தை நடந்தது. பேச்சுவார்த்தை பின்னர், திரையரங்குகள் வேலை நிறுத்தம் தற்காலிக வாபஸ் பெறப்பட்டதோடு, நாளை முதல் திரையரக்குகள் வழக்கம் போல் செயல்படும் என்று அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார்.

மேலும், கேளிக்கை வரி குறித்து அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடத்த குழு அமைக்கப்படும் என்றும், அரசு சார்பில் 6 பேரும், சினிமா உரிமையாளர்கள் சார்பில் 8 பேரும் அந்த குழுவில் இடம் பெறுவர். ஆனால், டிக்கெட் விலை என்னவோ ரூ.120 தான், அதனுடன் ஜிஎஸ்டி வரி 28 சதவீதம் சேர்த்து ரூ.153.60 காசாக இருக்கும் என்று அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்