ஆப்நகரம்

அஜித்தின் 25 ஆண்டு சினிமா வாழ்க்கையை சொல்லும் தீம் பாடல்!

விவேகம் படத்தில் தல அஜித்தின் 25 ஆண்டு கால சினிமா வாழ்க்கை குறித்த தீம் சாங் ஒன்று உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

TOI Contributor 15 Jun 2017, 5:58 pm
விவேகம் படத்தில் தல அஜித்தின் 25 ஆண்டு கால சினிமா வாழ்க்கை குறித்த தீம் சாங் ஒன்று உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil theme song of thala ajiths 25 years cinema journey composed by anirudh
அஜித்தின் 25 ஆண்டு சினிமா வாழ்க்கையை சொல்லும் தீம் பாடல்!


இயக்குநர் சிவாவும், நடிகர் அஜித்தும் மூன்றாவது முறையாக இணைந்துள்ள விவேகம் திரைப்படத்தின் பணிகள் துரிதமாக நடந்துவருகிறது. இப்படத்தில் காஜல் அகர்வால் மற்றும் அக்ஷரா ஹாசன் அஜித்திற்கு ஜோடியாக நடித்துள்ளனர். இந்நிலையில் இன்று விவேகம் படத்தின் டீசர் பாடல் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

படத்தில் அஜித்தின் 25 ஆண்டு கால சினிமா வாழ்க்கை குறித்து பேசும் தீம் சாங் உருவாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் அஜித்தின் சாதனைகள் குறித்த பாடல் வரிகள் இடம் பெறும் என்றும், பாட்டிற்கான டியூனை அஜித் தேர்ந்தெடுத்துள்ளார் என்றும் படக்குழுவினர் கூறுகின்றனர். இந்த பாடல் பெரிய அளவில் ஹிட்டாகும் என்று அனிருத் கூறுகிறார்.

வருகின்ற 19ஆம் தேதி வெளியிட இருக்கும் பாடலின் டீசரை தான் இன்று வெளியிட்டுள்ளனர். அஜித்தின் புகழ் சொல்லும் பாடல் இதுலாக கூட இருக்கலாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்