ஆப்நகரம்

அஜித் படத்தை வைத்து விளம்பரம் செய்த தேனி காவல்துறை

விஸ்வாசம் பட காட்சியை வைத்து வித்தியாசமான முயற்சியில் ஈடுபட்டுள்ளது தேனி மாவட்ட காவல்துறை. இது சமூக வலைதளங்களில் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

Samayam Tamil 11 Feb 2020, 12:38 pm
அஜித் நடிப்பில் சென்ற ஆண்டு வெளியான விஸ்வாசம் படம் அஜித் ரசிகர்கள் மட்டுமில்லாது, சினிமா ரசிகர்கள், பெண்கள் என எல்லா தரப்பினரையும் கவர்ந்தது. இந்த படத்தில் அஜித்தின் மகளாக நடித்திருக்கும் பெண்ணை யாரோ சிலர் துரத்துவார்கள். அவரோ தன் அம்மாவான நயன்தாராவுக்கு போன் செய்வார். போனில் பேசும் நயன்தாரா, பதற்றமடைந்து பேச, சற்று நேரத்தில் அங்கு அஜித் வருவார். இந்த தகவலை தெரிந்துகொண்ட நயன்தாரா இனி யாரும் உன்ன எதுவும் செய்ய முடியாது என்பார். படத்தில் இந்த காட்சி மிகவும் அருமையாக வந்திருக்கும். இதே காட்சியை பயன்படுத்தி மீம் உருவாக்கியுள்ளது தேனி மாவட்ட காவல்துறை.
Samayam Tamil viswasam theni district police


அந்த மீமில், அம்மாவிடம் மகள், தன்னை யாரோ துரத்துவதாக சொல்ல, அம்மாவோ உன் மொபைல்ல இருக்குற காவலன் SOS APP பட்டனை அழுத்துனு சொல்றாங்க. உடனே காவல்துறை அங்க வர்றதா மீம் ரெடி பண்ணிருக்காங்க.


இந்த ட்விட்டுக்கு கீழே அஜித் ரசிகர்கள் இதை பாராட்டி கமெண்ட் செய்து வருகிறார்கள்.

இதை பாராட்டிய ரசிகர் ஒருவர், அதை தன் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது


தேனி மாவட்ட காவல்துறை விஸ்வாசம் சண்டைக் காட்சி டெம்ப்ளேட்டை பயன்படுத்தி காவலன் ஆப் விழிப்புணர்வு மீம் தயார் செய்திருக்கிறார்கள். அதிகம் பகிருங்கள் என பாராட்டியிருக்கிறார்.


இன்னொருவர் நம்ம தல பட டெம்ப்ளேட்டை நல்லதுக்கு பயன்படுத்துறாங்க என்று கமெண்ட் செய்துள்ளார். நடிகர் அஜித் தன்னுடைய பெரும்பாலான படங்களில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு குறித்து பேசியிருப்பார். அவருடைய பட காட்சியை காவலன் செயலிக்காக பயன்படுத்தியது மிக பொருத்தமாக இருக்கிறது என்று சினிமா ரசிகர்களும், பொதுமக்களும் பாராட்டி வருகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்