ஆப்நகரம்

கிளாமருக்கு ஓகே:வருத்தப்படாத வாலிபர் சங்க தலைவி

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ஸ்ரீதிவ்யா.

TNN 25 Jan 2017, 6:39 pm
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ஸ்ரீதிவ்யா. இப்படத்தின் மூலம் தன்னுடைய நடிப்புத் திறமையால் ரசிகர் பட்டாளம் அமைத்துக்கொண்டார். இப்படத்திற்கு சிறந்த நடிகைக்கான சைமா விருதும் கிடைத்தது.
Samayam Tamil there is movie chance so ok to glamour says sridivya
கிளாமருக்கு ஓகே:வருத்தப்படாத வாலிபர் சங்க தலைவி


இப்படத்தைத் தொடர்ந்து ஜீவா, வெள்ளக்கார துரை, காக்கிச்சட்டை, ஈட்டி, பெங்களூர் நாட்கள், பென்சில் ஆகிய படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். ஆனால், காக்கிச்சட்டை படத்தைத் தவிர மற்ற படங்கள் சரியாக ஓடவில்லை. விஷாலுடன் இணைந்து மருது படத்தை கொடுத்தார். இப்படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் போதுமான வரவேற்பு கிடைக்கவில்லை. எனினும், கார்த்தியுடன் இணைந்து காஷ்மோரா, விஷ்ணு விஷாலின் மாவீரன் கிட்டு ஆகிய படங்களில் நடித்தார்.

இப்படங்களுக்கும் வரவேற்பு கிடைக்காததால் தற்போது படவாய்ப்புகள் குறைந்து ஜீவாவின் சங்கிலி புங்கிலி கதவ தொற படத்தில் மட்டும் நடித்துவருகிறார். இந்நிலையில், இப்படத்தை தொடர்ந்து அவருக்கும் ஒரு படமும் கையில் இல்லை. இதன் காரணமாக பெரிய ஹீரோக்களின் படங்களுக்கு காத்துக்கொண்டிருக்கிறார். அதுமட்டுமல்லாமல், கிளாராகவும் நடிக்க திட்டமிட்டுள்ளாராம். ஆனால், இவரது நண்பர்கள் உனக்கு கிளாமர் ஒத்துவராது என்று கூறியதன் காரணமாக ஜிம்முக்கு சென்று உடலை மெருகேற்றி வருகிறாராம். அதன் மூலமாக கிளாராக நடிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்