ஆப்நகரம்

“ரஜினியை விட உயர்வான நடிகர் எவருமில்லை” : ராதிகா ஆப்தே

“ரஜினியை விட உயர்வான நடிகர் எவருமில்லை” : ராதிகா ஆப்தே

TOI Contributor 12 Oct 2016, 6:30 am
கபாலி படத்தில் குமுதவள்ளியாக நடித்து அனைவரின் இதயத்தை கவர்ந்தவர் நடிகை ராதிகா ஆப்தே. சர்ச்சைகளுக்கும் பெயர் போன இவர் சமீபத்தில் பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ரஜினி குறித்து நினைவு கூர்ந்தார். ரஜினியுடன் கபாலி பட அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
Samayam Tamil there is no bigger star than rajinikanth radhika apte
“ரஜினியை விட உயர்வான நடிகர் எவருமில்லை” : ராதிகா ஆப்தே

அதில், ரஜினியை விட உயர்வானதொரு நடிகர் எவருமில்லை. சினிமா மீதான அர்ப்பணிப்பு, கடின உழைப்பு, நேர்மை இவற்றின் மொத்த உருவம் ரஜினி எனலாம். ஷூட்டிங்கின் போது மொழி தெரியாமல் சிரமப்பட்ட நேரங்களில் ரஜினி தான் மொழி பெயர்த்து உதவி செய்தார் என்றும் ராதிகா ஆப்தே கூறியுள்ளார். அவருடன் சேர்ந்து நடித்தது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது என்று கருத்து தெரிவித்துள்ளார் ராதிகா ஆப்தே!

அடுத்த செய்தி

டிரெண்டிங்