ஆப்நகரம்

கெளதமிக்கு ஸ்ருதிக்கும் சண்டை இல்லையாம்..!

சபாஷ் நாயுடு படத்திற்காக கெளதமி தேர்ந்தெடுத்த ஆடைகளை ஸ்ருதிஹாசன் அணிய மறுத்துவிட்டார் என்ற தகவல் முற்றிலும் பொய்யானது என ஸ்ருதிஹாசன் தரப்பிலிருந்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

TNN 16 Aug 2016, 3:03 pm
சபாஷ் நாயுடு படத்திற்காக கெளதமி தேர்ந்தெடுத்த ஆடைகளை ஸ்ருதிஹாசன் அணிய மறுத்துவிட்டார் என்ற தகவல் முற்றிலும் பொய்யானது என ஸ்ருதிஹாசன் தரப்பிலிருந்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil there is no no disagreement with gautami and shruthi hassan over costumes
கெளதமிக்கு ஸ்ருதிக்கும் சண்டை இல்லையாம்..!


கமல்ஹாசன் நடித்து, இயக்கி வரும் ‘சபாஷ் நாயுடு’ திரைப்படத்திற்கு ஆடை வடிவமைப்பாளராக நடிகை கெளதமி பணியாற்றி வருகிறார்.இந்த படத்தில் ஸ்ருதிஹாசனும் நடித்து வருகிறார்.ஆடை வடிவமைப்பாளர் என்ற முறையில் கெளதமி தேர்வு செய்த உடைகளை ஸ்ருதிஹாசன் அணிய மறுப்பதாகவும்,இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் இந்த தகவல் குறித்து விளக்கமளித்துள்ள ஸ்ருதிஹாசனின் ஊடகத் தொடர்பாளர்,இது அடிப்படை ஆதாரமற்ற பொய் என தெரிவித்துள்ளார்.”சபாஷ் நாயுடு திரைப்படத்தில் லாஸ் ஏஞ்சல்சில் பிறந்து வளர்ந்த பெண் கதாபாத்திரத்தில் ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார்.எனவே அதற்கேற்றார்போல் உடையை கெளதமி தேர்ந்தெடுத்து கொடுத்தார்.ஆனால் போட்டோ ஷுட்டில் ,உடைகளில் இன்னும் சில மாற்றங்கள் தேவைப்பட்டதை கெளதமியின் கவனத்திற்கு படக்குழு எடுத்துச்சென்றது.அதை புரிந்து கொண்ட கெளதமியின் இதற்கு ஒத்துழைப்பு கொடுத்தார்.எனவே ஸ்ருதிஹாசனுக்கும் கெளதமிக்கும் சண்டை என்பதெல்லாம் திட்டமிட்டு பரப்பப்பட்ட பொய்.” என அவர் விளக்கமளித்துள்ளார்.

சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற ஸ்ருதிஹாசனின் பிறந்தநாள் விழாவில் கூட கெளதமி கலந்து கொண்டார்.மேலும் கெளதமிக்கும்,ஸ்ருதிஹாசனுக்கம் இடையே சுமூக உறவு இருப்பதாகவும் விபரம் தெரிந்த திரைத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்