ஆப்நகரம்

‘தெறி’ அப்டேட் வெளியாகியுள்ளது!

விஜய் நடித்த ‘தெறி’ படத்தின் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.

TOI Contributor 27 Feb 2016, 11:23 am
விஜய் நடித்த ‘தெறி’ படத்தின் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.
Samayam Tamil theri update has released
‘தெறி’ அப்டேட் வெளியாகியுள்ளது!

டைரக்டர் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் ‘தெறி’. தற்போது படம் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. ‘தெறி’ படம் ஏப்ரல் 14-ம் தேதி வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளதால் விரைந்து முடிப்பதற்கான பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
தற்போது, ‘தெறி’ படத்தின் எடிட்டிங் பணிகள் அனைத்தும் முடிந்துவிட்டது. இதைத் தொடர்ந்து ரீ-ரெக்கார்டிங் பணிகளை தொடங்கவிருக்கின்றனர். மேலும் கிராபிக்ஸ் மற்றும் கலர் திருத்தும் பணிகளும் ஒரு பக்கம் நடந்து வருகிறது. இதையெல்லாம் முடித்துவிட்டு மார்ச் மாத இடையில் ஆடியோவை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள் என தெரிகிறது.
படத்தில் விஜய்யுடன், சமந்தா, எமி ஜாக்சன் என இரு கதாநாயகிகள் நடித்துள்ளனர். பிரபு, ராதிகா சரத்குமார், இயக்குனர் மகேந்திரன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்