ஆப்நகரம்

‘பசும்பொன் தெய்வம்’ என்ற பெயரில் உருவாகும் தேவரின் வாழ்க்கை வரலாறு படம்!

தேவரின் வாழ்க்கை வரலாறு ‘பசும்பொன் தெய்வம்’ என்ற வரலாற்றுப் படமாக உருவாகி வருகிறது.

Samayam Tamil 29 Oct 2018, 7:41 pm
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பிறந்த ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் இம்மாதம் 28, 29, 30 ஆகிய மூன்று நாட்கள் தேவரின் குரு பூஜை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கையை ‘பசும் பொன் தெய்வம்’ என்ற பெயரில் 2 மணி நேர வரலாற்றுத் திரைப்படமாக எடுத்து வருகிறார் சூலூரைச் சேர்ந்த கலைப்பித்தன் என்பவர். இந்தப் படத்திற்கு திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி, படத்தைத் தயாரித்து, இயக்கியும் வருகிறார் சூலூர் கலைப்பித்தன்.
Samayam Tamil thevar


இந்தப் படம் பற்றி கலைப்பித்தன் கூறுகையில், ‘‘பதவிகளுக்கு ஆசைப்படாமல் நல்லது செய்த குணம், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் போராட்டத்துக்கு தென் மாவட்டங்களில் இருந்து இளைஞர்களை திரட்டி அனுப்பியது, சாதிக்கு அப்பாற்பட்டு நின்று மக்களுக்காக உழைத்தது, 4,000 நாட்கள் சிறையில் இருந்தது என அடுக்கிக்கொண்டே போகலாம். இந்தப் படத்தில் தேவர் குறித்த ஒவ்வொரு நிகழ்வையும், அது நடந்த சரியான காலகட்டத்தையும், தேதியையும் பதிவு செய்திருக்கிறோம். மேலும் இந்தப் படத்திற்கு பின்னணி இசை வேலைகள் பாக்கி இருக்கின்றன. அதை முடித்து விட்டு டிசம்பரில் படத்தை வெளியிட இருக்கிறோம்’’ என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்