ஆப்நகரம்

‘திருநாள்’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ்!

‘திருநாள்’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது சென்சார் போர்டு.

TOI Contributor 11 Apr 2016, 3:33 pm
‘திருநாள்’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது சென்சார் போர்டு.
Samayam Tamil a certificate
‘திருநாள்’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ்!

ஜீவா, நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘திருநாள்’. ராம்நாத் இயக்கியுள்ள இப்படத்திற்கு சென்சார் ரிசல்ட் அறிவித்துள்ளது. சமீபத்தில் ஜீவா நடிப்பில் ‘போக்கிரி ராஜா’ படம் வெளியானது. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தை தொடர்ந்து ஜீவா நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘திருநாள்’. இதில் ஜீவாவிற்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். கிராமிய பின்னணியில் அமைந்த இந்த படத்தை ராம்நாத் என்பவர் இயக்கியுள்ளார்.
விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து, படத்திற்கான பின்னணி வேலைகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். தற்போது படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து ரிலீசுக்கு தயாராகி உள்ளது.
இந்நிலையில், படத்தை தணிக்கை குழுவிற்கு அனுப்பப்பட்டது. படத்தை பார்த்த குழுவினர் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியானது. இது ரசிகர்களிடையே வரவேற்கப்பட்டது. படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்