ஆப்நகரம்

எல்லை மீறிய கவர்ச்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் நடிகர் பிரசன்னா!

நடிகர் பிரசன்னா, சொப்பன சுந்தரி என்ற எல்லை மீறிய கவர்ச்சி நிகழ்ச்சி ஒன்றை பிரபல தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கி வருகிறார்.

Samayam Tamil 19 Dec 2018, 3:36 pm
தற்போது சின்னத்திரையில் போட்டிப் போட்டுக் கொண்டு புதுப்புது நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகின்றனர். ரியாலிட்டி ஷோக்கள் என்ற பெயரில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகின்றனர். இவையெல்லாம் டிஆர்பி ரேட்டிங்கில் இடம் பிடிப்பதற்காக தான். அந்த வகையில் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் என மூன்று சேனல்களுக்கும் கடும் போட்டி நிலவி வருகிறது.
Samayam Tamil sopona


சீரியலுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்த சன் டிவியினர் இப்படி கவர்ச்சிக்கு மாறிவிட்டார்களா என எல்லோரையும் கேட்க வைத்து விட்டது. ஆனாலும் இன்று வரை சன் டிவி தான் டிஆர்பி லிஸ்டில் முதலிடத்தில் இருக்கிறது.

சன் தொலைக்காட்சியினர் ‘சொப்பன சுந்தரி’ என ஒரு ரியாலிட்டி ஷோவை நடத்தி வருகிறார்கள். இந்த நிகழ்ச்சியை நடிகர் பிரசன்னா தொகுத்து வழங்கி வருகிறார். இதில் ஆபாசமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கிறது. இதில் போட்டியாளர் பவித்ரா எப்படி கவர்ச்சியாக உடை அணிந்திருக்கிறார். அவர் நிகழ்ச்சி தொகுப்பாளர் மட்டுமல்ல மிஸ் சவுத் இந்தியா 2017 பட்டத்தை வாங்கியவரும் கூட. அவரின் புகைப்படமும் தற்போது வெளியாகி விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்