ஆப்நகரம்

பாகுபலி ‘காலகேய’ மன்னனின் உண்மை முகம் இதுதான்

பாகுபலி படத்தில் நடித்த ’காலகேய’ மன்னனின் உண்மை முகம் குறித்து இங்கே காணலாம்.

TNN 1 May 2017, 6:03 pm
சென்னை: பாகுபலி படத்தில் நடித்த ’காலகேய’ மன்னனின் உண்மை முகம் குறித்து இங்கே காணலாம்.
Samayam Tamil this is what the villain of bahubali looks like in real life
பாகுபலி ‘காலகேய’ மன்னனின் உண்மை முகம் இதுதான்


ராஜமௌலி இயக்கத்தில் உருவான பாகுபலி திரைப்படம் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியானது. அப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதையடுத்து 2ஆம் பாகம் உருவாக்கப்பட்டு, தற்போது திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் முதல் பாகத்தில் காலகேய மன்னனாக நடித்தவரின் உண்மை முகம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருடைய பெயர் பிரபாகர்.

அவர் நடித்த மரியாத ராமண்ணா படம் 2010ஆம் ஆண்டு சிறந்த தெலுங்கு படத்திற்கான தேசிய விருதை பெற்றது. மேலும் தொங்கட்டு, ஆகடு, கப்பார் சிங், சைரய்னோடு உள்ளிட்ட தெலுங்கு படங்களில் நடித்து பெயர் பெற்றவர். பாகுபலி படத்தில் கருத்த முகத்தில் தழும்புகளுடன் காணப்படும் பிரபாகர், நிஜத்தில் மிகவும் அழகான முகம் கொண்டவர்.

This is what the villain of Bahubali looks like in real life!.

அடுத்த செய்தி

டிரெண்டிங்