ஆப்நகரம்

விஜய் ஆண்டனிக்கு வில்லனான தியாகராஜன்

நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் ‘எமன்’ படத்தில் வில்லனாக ‘மம்பட்டியான்’ புகழ் தியாகராஜன் நடிக்கவுள்ளார்

TNN 12 Apr 2016, 3:15 pm
நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் ‘எமன்’ படத்தில் வில்லனாக ‘மம்பட்டியான்’ புகழ் தியாகராஜன் நடிக்கவுள்ளார்.
Samayam Tamil thiyagarajan to act as villan
விஜய் ஆண்டனிக்கு வில்லனான தியாகராஜன்


இசையமைப்பளாராக இருந்து நடிகராக மாறியவர் விஜய் ஆண்டனி. ‘நான்’ படத்தில் ஹீரோவாக அறிமுகமான விஜய் ஆண்டனி தொடர்ந்து சலீம், இந்தியா-பாகிஸ்தான், பிச்சைக்காரன் படங்களில் நடித்து புகழ்பெற்றார். அதிலும் சமீபத்தில் வெளியான பிச்சைக்காரன் சூப்பர்-டூப்பர் ஹிட்டானதோடு, வசூலையும் வாரிக்குவித்தது.

இப்படம் இப்போது பல மொழிகளில் ரீ-மேக்காக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்நிலையில், இப்படத்தை தொடர்ந்து ’நான்’ படத்தை இயக்கிய இயக்குநர் ஜீவா சங்கர் இயக்கும் ‘எமன்’ படத்தில் நடிக்கிறார் விஜய் ஆண்டனி. நான் படம் போன்று இதையும் வித்தியாசமான படமாக இயக்க உள்ளார் ஜீவா சங்கர்.

இப்படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முகம் கொண்ட தியாகராஜனும் நடிக்கிறார். ‘எமன்’ படத்தில் தியாராஜன் வில்லன் ரோலில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மே மாதம் இறுதியில் படப்படிப்பு நிறைவடைய இருக்கிறது.

தியாகராஜன் கடைசியாக 2010ம் ஆண்டு ‘துரோகி’ என்ற படத்தில் நடித்தார். அதன்பிறகு இப்போது ‘வாய்மை’ என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்