ஆப்நகரம்

நடனப்புயலை வைத்து இயக்கும் ‘தூத்துக்குடி’ பட ஹீரோ!

‘தூத்துக்குடி’ பட ஹீரோ ஹரிகுமார், தற்போது நடனப்புயல் பிரபுதேவாவை வைத்து ஒர படத்தை இயக்கவுள்ளார்.

Samayam Tamil 25 Oct 2018, 5:05 pm
தமிழ் சினிமாவில் பிரபல டான்ஸராக இருந்து வந்தவர் ஹரிகுமார். இவர் டான்ஸராக இருக்கும் போது ‘தூத்துக்குடி’ மற்றும் ‘மதுரை சம்பவம்’ ஆகிய படங்களின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். ஹரிகுமார், நடன இயக்குனர் பிரபுதேவாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.
Samayam Tamil harikumar-prabhudeva


இவர் தற்போது ஒரு படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் கே.இ.ஞானவேல் ராஜா தயாரிக்கவுள்ளார். இந்தப் படத்திற்கு ‘தேள்’ என்று பெயர் வைத்துள்ளனர். மேலும் இந்தப் படத்திற்கு சி.சத்யா இசையமைக்கவுள்ளார்.

இந்த படத்தில் பிரபுதேவாவுகு ஜோடியாக சம்யுக்தா ஹெக்டே என்ற கன்னட நடிகை நடிக்கவுள்ளார். இவர் கன்னட பிக்பாஸ் 5-ல் கலந்து கொண்டவர். இந்த படத்தினை பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்